வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்தது தெலுங்கானா அரசு

வெப்பநிலை உயர்வு காரணமாக தெலங்கானாவில் வெப்ப அலை மற்றும் சூரிய வெப்பம் மாநிலப் பேரிடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும், இது முந்தைய ரூ.50,000லிருந்து கணிசமான அதிகரிப்பு ஆகும்.

Telangana Declares Heatwave State Disaster Announces Relief
Telangana Declares Heatwave State Disaster

வெப்ப அலை அதிகரிப்பு:

தெலுங்கானாவில் வெப்ப அலை (Heatwave) அதிகரிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக (State Disaster) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையையும் உயர்த்தியுள்ளது.

Telangana Declares Heatwave State Disaster Announces Relief
Telangana Heatwave Relief

 தெலுங்கானா அரசு ரூ.4 லட்சம் நிவாரணம்

வெப்ப அலையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு வெப்ப அலையால் ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது அந்தத் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


Telangana Govt on Heatwave

தெலுங்கானா அரசு நிவாரணத் தொகை உயர்வு:

முன்னதாக, வெப்ப அலை (Heatwave) அல்லது வெயிலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்பந்து திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இது போதுமானதாக இல்லை என்றும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. குறிப்பாக, வெளியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வெயிலிலால் பாதிக்கப்படும் முதியவர்கள் போன்ற பலருக்கு பலனளிக்கும் வகையில் நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

Heatwave relief from SDRF

மாநில பேரிடர் நிவாண நிதி (SDRF):

மக்களின் கோரிக்கையை ஏற்ற மாநில அரசு நிவாரணத் தொகையை உயர்த்தியதுடன், வெப்ப அலையை மாநிலப் பேரிடராகவும் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தெலுங்கானா அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் (GO), மாநில பேரிடர் நிவாண நிதி (SDRF) விதிமுறைகளின்படி, இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMD records on Heat wave

வானிலை ஆய்வு மையம் (IMD):

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பால், தெலுங்கானாவில் கடுமையான மற்றும் நீடித்த வெப்ப அலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அளித்துள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது 15 வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளன.

Heatwave victims

தெலுங்கானா கூலித் தொழிலாளர்:

நல்கொண்டா, மஞ்சேரியல், பெத்தப்பள்ளி மற்றும் ஜக்தியால் போன்ற மாவட்டங்கள் 30 நாட்களுக்கு மேல் பதிவாகியுள்ளன. நகர்ப்புறங்கள், குறிப்பாக ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றியுள்ள நகராட்சிகள், நகர்ப்புற வெப்ப தீவு விளைவால் தகித்தன. இது கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களை அதிகமாகப் பாதித்துள்ளது.

Heatwave Preparedness

தெலுங்கானா அரசு குடிநீர் பந்தல்கள்:

ஏற்கெனவே அதீத வெப்பநிலை காரணமாக தெலுங்கானாவில் பல மாவட்டங்கள் ஏற்கனவே ORS பாக்கெட்டுகளை விநியோகித்தல் மற்றும் குடிநீர் பந்தல்கள் அமைத்தல் போன்ற முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. ஆனால் இதுவரை முறையான அறிவிப்பு இல்லாதது போதுமான நிதி உதவி கிடைக்காத சூழல் நிலவியது.

Latest Videos

vuukle one pixel image
click me!