மும்பையில் முதல் பசுமை நடைபாதை! அமைதியை அனுபவிக்க சிறந்த இடம்!

Published : Apr 15, 2025, 02:28 PM IST

மும்பையில் திறக்கப்பட்டுள்ள 705 மீட்டர் நீள உயர்மட்ட பசுமை நடைபாதை அமைதியான சூழலில் நேரத்தைச் செலவிட சிறந்த இடமாக மாறியுள்ளது. இதனை பயன்படுத்துவதற்கான நேரம், கட்டணம் முதலிய விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

PREV
18
மும்பையில் முதல் பசுமை நடைபாதை! அமைதியை அனுபவிக்க சிறந்த இடம்!
Mumbai's first treetop walk at Malabar Hill

கமலா நேரு பூங்காவை டூங்கர்வாடி வூட்ஸுடன் இணைக்கும் இந்த ட்ரெயில், மும்பையின் பசுமையான பகுதியை பருந்துப் பார்வையில் பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில். சிங்கப்பூரின் பிரபலமான ட்ரீ டாப் வாக் பாதையை அடிப்படையாகக் கொண்டு சுமார் 4 ஆண்டுகளில் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

28
Treetop walk at Malabar Hill

கண்ணாடி தரை தளத்திலிருந்து கீழே பார்க்கலாம். இது காடுகளின் ஊடாக பயணிக்கும் உணர்வைத் தரும். கூடவே அரபிக் கடலின் காட்சியும் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

38
Birds

பறவை பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கம். மீன்கொத்தி, கிளிகள், புல்புல் போன்ற பறவைகளின் கீச்சொலிகள் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

48
Trees

குல்மொஹர் முதல் ஜாமுன் வரை, 100க்கும் மேற்பட்ட மர இனங்கள் இங்கே உள்ளன. அவை நிழல் தருவதோடு சுற்றுச்சூழலில் புத்துணர்ச்சியை நிரப்புகின்றன.

58
Nature

இங்கே மரங்களை மட்டுமல்ல, காடுகளில் மறைந்திருக்கும் ஊர்வனவற்றையும் பார்க்கலாம். ஆனால் அவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. பாலத்தில் நடக்கும்போது அவை அனைத்தும் பாதுகாப்பான தூரத்தில்தான் இருகுகம்.

68
Ticket and Timing

இந்தியர்களுக்கு டிக்கெட் கட்டணம் வெறும் 25 ரூபாய். வெளிநாட்டினருக்கு 100 ரூபாய். ஆன்லைன் முன்பதிவு ஆப்ஷனும் உள்ளது. வரிசையில் காத்திருக்காமல் உள்ளே நுழையலாம். காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் பாதை திறந்திருக்கும்.

78
Mumbai treetop walk Rules

கமலா நேரு பூங்காவின் பின்புறம் சிரி சாலையில் அமைந்துள்ள நுழைவு வாயில், உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியது. காரில் வருபவர்களுக்கும் வசதியானது.

88
Mumbai Malabar Hills

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரே நேரத்தில் 200 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும். ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒரு மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்படும். அந்த நேரத்திற்குள் வெளியேறிவிட வேண்டும். இந்தப் பாதையில் கையில் உணவு வகைகளைக் கொண்டுவர அனுமதி இல்லை. ஆனால், தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories