Weather Forecast for Monsoon 2025
இயல்பை விட அதிகமான பருவமழை
இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) 2025ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று கணித்துள்ளது. நீண்ட கால சராசரி (LPA) 105% ஆக இருக்கும் என்றும் கணிப்பில் 5% வரை வித்தியாசம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
லடாக், வடகிழக்கு மற்றும் தமிழ்நாடு தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Monsoon forecast
நான்கு மாதங்களில் அதிக மழை
"ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத பருவமழைக் காலத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று ஐஎம்டி தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய 59% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சாதாரண பருவமழை அளவீடு 96% முதல் 104% வரை இருக்கும்.
Monsoon report
எல் நினோ
எல் நினோ நிலை நடுநிலையாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. எல் நினோ என்பது மத்திய பசிபிக் பகுதியில் 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பநிலை உயர்வைக் குறிக்கிறது. "நடுநிலை" என்பது எல் நினோ வெப்பநிலையில் உயர்வு இல்லை என்பதைக் குறிக்கிறது.
இருப்பினும், நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Monsoon predictions
சராசரி மழைப்பொழிவு
"இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட சுமார் 105% ஆக இருக்கும். சராசரியாக 91 செ.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், சில பகுதிகளில் சராசரியை விட குறைவாகவும், சில பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவும் இருக்கும். கடந்த ஆண்டை விட வெப்ப அலை அதிகமாக இருக்கும், குறிப்பாக வட இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு கூடுதலாக இருக்கும்" என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில், மத்திய மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் இதற்கான காரணங்களில் ஒன்று என்றும் ஐஎம்டி தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.
India Meteorological Department
ஸ்கைமெட் கணிப்பு
எல் நினோ ஆண்டாக இருந்த 2023ஆம் ஆண்டில், பருவமழை 6% குறைவாகப் பெய்தது. 2024ஆம் ஆண்டில் எல் நினோ நடுநிலையாக இருந்ததால் 8% அதிக மழைப்பொழிவு கிடைத்தது என்றும் வானியை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி, தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் (Skymet), இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்று கூறியிருந்தது