சிபிஎஸ்இ பள்ளிகள், மாணவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்க, கொழுப்பு நிறைந்த உணவுகளின் தீமைகளை விளக்கும் 'ஆயில் போர்டு'களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ (CBSE), கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கல்வி கற்பிப்பதற்காகவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்கான தினசரி நினைவூட்டலாகவும் "ஆயில் போர்டு"களை அமைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணித்து குறைப்பதற்காக "சுகர் போர்டு" அமைக்குமாறு இரண்டு மாதங்களுக்கு முன்பு வாரியம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு வந்துள்ளது.
24
"ஆயில் போர்டு" என்றால் என்ன?
"ஆயில் போர்டு" என்பது பள்ளி வளாகங்களுக்குள் உள்ள உணவு விடுதிகள், வரவேற்பு அறைகள் மற்றும் கூட்ட அறைகள் போன்ற பொதுவான இடங்களில் நிறுவப்படும் சுவரொட்டிகள் அல்லது டிஜிட்டல் திரைகளைக் குறிக்கின்றன. இந்த பலகைகள், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து அறிவிக்கும். இதன் மூலம் மாணவர்களும் ஊழியர்களும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைத் தெரிந்துகொள்வார்கள் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
34
உடல் பருமன் குறித்த கவலைகள்
"பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் பிரச்சினை வேகமாக அதிகரித்து வருவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5), 2019-21 இன் படி, நகர்ப்புறங்களில் ஐந்தில் ஒரு பெரியவர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவராக இருக்கிறார்," என்று சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.
2025 இல் வெளியிடப்பட்ட லான்செட் குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (GBD) 2021 என்ற அறிக்கையில் உள்ள உடல் பருமன் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை 2021 இல் 18 கோடி. இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் 44.9 கோடியாக உயரும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
"பெரும்பாலும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் குறைந்த உடல் செயல்பாடுகளால்தான் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் ஏற்படுகிறது" என்றும் அவர் கூறினார்.