விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச மனுக்களில் மட்டுமல்லாமல், காவல்துறையில் அளித்த புகாரிலும் தனது மனைவி தன்னை "ஆண்தன்மை அற்றவர்" என்று குறிப்பிட்டதால், சமூகத்தில் தனது பெயர் கெட்டுவிட்டதாக அந்த கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்தத் தகவல்கள் பொது ஆவணங்களாக மாறியதால், தனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.
ஆனால், கணவரின் கொடுமைகளை நிரூபிக்கவும், விவாகரத்து கோரிக்கையை நியாயப்படுத்தவும் மட்டுமே மனைவி இந்த கருத்துக்களைத் தெரிவித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது. சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை அவதூறாகக் கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த வழக்கின் கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனைவி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையும் நிறுத்தப்பட்டது.