இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்பட்ட திடீர் தடங்கல் மக்கள் பயணத் திட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளது. இண்டிகோ நிறுவனம் நாடு தழுவிய ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய, விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அவதியில் சிக்கினர்.
ரத்து பட்டியல் நீளும் சூழலில், பயணிகள் தகவல் பலகைகளின் முன் கவலையுடன் நிற்கும் காட்சிகள் நாடு முழுவதும் பதிவானது. இதன் பின்னணியில் சமீபத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தர்ப்பவாத விலை உயர்வுகளைத் தடுக்கவும் பொதுமக்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலைமை சீராகும் வரை இது தொடரும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.