பிரியங்கா காந்திக்கு செக் வைக்க குஷ்பு.! பாஜகவின் அதிரடி பிளான்

First Published | Oct 18, 2024, 11:17 AM IST

வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் குஷ்புவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளன.

kushboo


குஷ்புவம் அரசியலும்

தமிழ்திரைத்துறையில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் கலக்கியவர் நடிகை குஷ்பு, தமிழகத்தில்  திமுக, காங்கிரஸ் என தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் தற்போது பாஜகவில் உள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் திமுகவிடம் வீழ்ந்தார். இதனையடுத்து கை விடாத பாஜக, தேசிய மகளிர் ஆணைய பதவியை குஷ்புவிற்கு வழங்கியது.

ஆனால் சில மாதங்களிலையே இந்த பதவியை ராஜினாமா செய்தார். முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.  இதனையடுத்து தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கவில்லை. இந்தநிலையில் தான் காங்கிரஸ் தலைமையை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் நடிகை குஷ்புவிற்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Rahul Gandhi

வயநாட்டில் ராகுல் காந்தி

மத்தியில் நீயா- நானா என்ற போட்டியானது பாஜக, காங்கிரஸ் மத்தியில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி  மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அப்போது தனது குடும்ப தொகுதியான அமேதி கை விட்ட நிலையில் வயநாடு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து மக்களவையில் வயநாடு தொகுதி எம்பியாக கடந்த 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.  2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு மற்றும் ரேபரலி தொகுதியில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார்.

ஆனால் ஒருவர் இரண்டு எம்பி பதவியில் தொடரக்கூடாது என்பதன் விதியின் காரணமாக வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

Tap to resize

Priyanka Gandhi

வயநாட்டில் பிரியங்கா காந்தி

இதன் காரணமாக நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தனது குடும்ப தொகுதி கைவிட்ட போதும் வயநாடு தொகுதி மட்டுமே கை கொடுத்தது. எனவே அப்படிப்பட்ட தொகுதியை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக  தனது சகோதரியும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை களம் இறக்கியுள்ளார் ராகுல்காந்தி, கடந்த 25 ஆண்டு காலமாக அவர் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. 

 இந்த முறை தான் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளார். எனவே இந்த தேர்தலில் ராகுல் காந்தி வாங்கிய வாக்கை விட அதிக வாக்குகளை பிரியங்கா காந்தி பெற வைக்க காங்கிரஸ் கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் பிரியங்கா காந்திக்கு டப் கொடுக்க நடிகை குஷ்புவை களம் இறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டப் கொடுப்பாரா குஷ்பு

கடந்த மக்களவை தேர்தலின் போது நடிகரான சுரேஷ் கோபி வெற்றி பெற்று கேரளாவில் கால் பதித்த பாஜக, இந்த முறை நடிகை குஷ்புவை வெற்றி பெற வைக்க திட்டமிட்டுள்ளது. பாஜக சார்பாக வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இறுதி பட்டியலில் நடிகை குஷ்பவின் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்த போதும் குஷ்புவை களம் இறக்கினால் வெற்றி கிடைக்குமா.? வாக்குகள் கிடைக்குமா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அல்லது உள்ளூரை சேர்ந்த பாஜக நபரை இறக்கலாமா என்பது தொடர்பாக பாஜக தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.. எனவே இந்த இடைத்தேர்தல் முடிவுகளை அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளனர்.    

Latest Videos

click me!