1000 ரூபாயை எட்டிய சமையல் எரிவாயு விலை
குறிப்பாக 400 ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையான சிலிண்டர் தற்போது 900 ரூபாயை எட்டியுள்ளது. மேலும் மானியமும் வங்கி கணக்கில் வராத நிலை தான் உள்ளது. இதனால் ஏழை மற்றும் எளிய மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்கு மாறிவருகின்றனர். இந்த நிலையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பார்கள். அந்த வகையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 என நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.