பரிவர்த்தனையின் போது முன்னெச்சரிக்கைகள்
நிதி பரிவர்த்தனைகளின் போது சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். முதலில், நீங்கள் பெறும் ரூபாய் நோட்டின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கவனமாகச் சரிபார்க்கவும். தெரியாத நபர்களிடம் அதிக அளவு பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். ஒரு பரிவர்த்தனை சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அதைத் தவிர்ப்பது நல்லது.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும் கவனமாக இருக்கவும். ஏடிஎம்.ல் பெறப்பட்ட நோட்டுகளைச் சரிபார்த்து, பெறப்பட்ட ரசீதை பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது?
நீங்கள் போலி நோட்டை கண்டறிந்தால், அதை வைத்திருக்காதீர்கள். உடனடியாக அருகில் உள்ள வங்கிக்கு சென்று இது குறித்து தெரிவிக்க வேண்டும். நோட்டை வங்கியில் டெபாசிட் செய்யும் போது, அந்த நோட்டு எங்கிருந்து பெறப்பட்டது? எந்த சூழ்நிலையில் பெறப்பட்டது? போன்ற முழுமையான விவரங்களை அளிக்கவும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.