இந்தியாவின் 7 நகரங்களில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! முழு விவரம்!

Published : May 13, 2025, 12:34 PM IST

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதறம் முழுமையாக முடிவடையாத நிலையில், 7 நகரங்களில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

PREV
14
Air India IndiGo flights cancelled

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்கள் இன்று ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் மூன்று எல்லை நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளன. ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு இருவழி விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட்டுக்கான விமானங்களையும் இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

24
ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து

''சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் (பயணிகள்) பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கான விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மே 13 ஆம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மேலும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்" என்று ஏர் இந்தியா நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம்

"சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்பை எங்கள் மிகுந்த முன்னுரிமையாகக் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ''இது உங்கள் பயணத் திட்டங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் குழுக்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மேலும் கூடுதல் புதுப்பிப்புகள் குறித்து உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்போம்" என்று இண்டிகோ கூறியுள்ளது.

34
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப்பில் உள்ள விமான நிலையங்கள் உள்பட மொத்தம் 32 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் போர் நிறுத்தம் செய்யப்பட்டதால் 32 விமான நிலையங்களில் பொதுமக்கள் விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)நேற்று தெரிவித்து இருந்தது.

44
எல்லையில் மீண்டும் தாக்கும் பாகிஸ்தான்

ஆதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பிகானர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், காண்ட்லா, காங்க்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லூதியானா, முந்த்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், சர்சாவா, சிம்லா, தோய்ஸ் மற்றும் உத்தர்லாய் ஆகிய விமான நிலையங்களிலும் சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இரு நாடுகளும் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டாலும் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஆகையால் பதற்றம் இன்னும் முழுமையாக தணியாததால் ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று பல்வேறு வழித்தடங்களில் விமான சேவையை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

Read more Photos on
click me!

Recommended Stories