டொனால்ட் டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்து போர் நிறுத்தமா? இந்தியா விளக்கம்!

Published : May 13, 2025, 09:11 AM IST

வர்த்தக தொடர்புகளை நிறுத்தி விடுவேன் என சொன்னதால் இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய நிலையில், இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

PREV
14
India Explanation Donald Trump speech about casefire

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதன் பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அப்பாவி மக்களை குறி வைத்தது. நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது.

24
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம்

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அடி தாங்க முடியாமல் பாகிஸ்தான் இறங்கி வந்ததால் இந்தியா மோதலை நிறுத்த ஒப்புக் கொண்டது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்தது சர்ச்சையானது. ''அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் அழுத்தத்துக்கு பணிந்த இந்தியா?

நமது நாட்டு பிரசச்னையில் மூன்றாம் தரப்பு எப்படி தலையிடலாம்? என இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனைத் தொடர்ந்து டிரம்ப், ''நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால் இரு நாடுகளிலும் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவிடவிமும், பாகிஸ்தானிடமும் சொன்னேன். இதன்பிறகு இரு நாடுகளும் போரை நிறுத்தின'' என்றார். இதனால் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பயந்தே இந்தியா போரை நிறுத்தியதாக இந்தியாவில் உள்ள சிலர் கூறி வருகின்றனர்.

34
டிரம்ப் பேச்சுக்கு இந்தியா மறுப்பு

இந்நிலையில், டிரம்ப்பின் பேச்சை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மே 9 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் பேசினார் என்றும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மே 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும், மே 10 ஆம் தேதி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேசினார் என்றும், இந்த எந்த விவாதத்திலும் வர்த்தகம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

44
வர்த்தக பேச்சு நடைபெறவில்லை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகத்தை நிறுத்துவதற்கான எச்சரிக்கை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குக் காரணம் அல்ல என்று உயர் அரசாங்க வட்டாரங்கள் தெளிவுப்படுத்தியுள்ளன. ஆனால் இது தொடர்பாக இந்தியா சார்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories