நகராட்சி நிர்வாக துறையில் 2569 பணியிடங்கள் ரிசல்ட் வெளியீடு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Jul 05, 2025, 09:14 AM ISTUpdated : Jul 05, 2025, 09:58 AM IST

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் காலியாக உள்ள 2569 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

PREV
14
தமிழகத்தில் வேலைவாய்ப்பு

பல லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து வேலை தேடி பல இடங்களுக்கு செல்கிறார்கள். அந்த வகையில்  தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசும் செயல்படுத்தி வருகிறது. இதன் படி தனியார் துறையின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. 

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வேலைக்காக வழிகாட்டி வருகிறது. இது மட்டுமில்லாமல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தி வருகிறது. இதனால் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தப்படுகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்குபவர்களுக்காக பயிற்சிகள் வழங்கி கடன் உதவி திட்டங்களுக்கான ஆலோசனைகளும் வழங்கி வருகிறது.

24
அரசு துறையில் வேலைவாய்ப்பு

மேலும் அரசு பணியில் இணைவதற்காக தேர்வர்கள் இரவு பகலாக படித்து அரசு பணியாளர் தேர்வு மூலமாக தேர்வெழுதி அரசு பணியை பெறுகிறார்கள். இதற்காக தமிழக அரசு இலவச பயிற்சியும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகாராட்சி நிர்வாக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சி இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் / இளநிலை பொறியாளர்,

34
நகராட்சி துறையில் பணியாளர் தேர்வு

உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர். தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2569 பணியிடங்களை நிரப்பிட 02.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வாளர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது.

44
தேர்வு செய்யப்பட்ட பணியாளர் விவரம் வெளியீடு

இத்தேர்வில் தேர்வு பெற்ற தேர்வாளர்களுக்கு அக்டோபர் 2024 ல் தேர்வுக் குழுவால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 24.02.2025 அன்று வெளியிடப்பட்டது. 

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் நேரடித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories