மே 26, 2014: உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில் கோரக்பூர் செல்வதற்கு முன்பு கோரக் எக்ஸ்பிரஸ் ரயில் கலீலாபாத் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 4, 2015: மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா அருகே காமயானி, ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் இந்த விபத்து நடந்தது.
மார்ச் 20, 2015: டேராடூனில் இருந்து வாரணாசி சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள பச்ராவ் ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சின், இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.