வாய்ஸ் கமாண்ட் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! ரயில்வேயின் புதிய பேமெண்ட் வசதி!

First Published | Sep 8, 2024, 10:07 AM IST

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது UPI பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.

IRCTC Train ticket booking using voice command

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது UPI பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். UPI ஐடி அல்லது மொபைல் எண் மட்டும் டைப் செய்து வாய்ஸ் கமாண்ட் மூலம் பரிவர்த்தனையை முடிக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IRCTC voice command

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மற்றும் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு நிறுவனமான கோரோவர் (CoRover) ஆகியவை இணைந்து இந்த வசதியை உருவாக்கியுள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் இந்த வாய்ஸ் கமாண்ட் அம்சம் அறிமுகப்படுத்தியது.

Latest Videos


IRCTC Train ticket booking

"பேமெண்ட் கேட்வேயுடன் ஒருங்கிணைந்த இந்த புதுமையான அம்சம் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கி இருக்கிறது. இது ஒரு பெரிய முன்னேற்றம்" என்று மூன்று நிறுவனங்களின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தொழில்நுட்பம் மற்றும் மொழித் தடைகளை நீக்கி, டிஜிட்டல் பேமெண்டுகளை வேகமாகவும் எளிமையாகவும் மேற்கொள்ள உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Train ticket booking using voice command

இந்த அம்சம் பேமெண்ட் கேட்வேயின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) மற்றும் கோரோவரின் (CoRover) AI மாடலான பாரத்ஜிபிடி மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்தி, குஜராத்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் குரல் உள்ளீடுகளை ஏற்கிறது.

IRCTC UPI 123Pay

"நாங்கள் கடந்த ஆண்டு UPI 123 ஐ அறிமுகப்படுத்தினோம். ஆனால் அதன் உண்மையான பயன்பாட்டு இப்போது தொடங்கியுள்ளது" என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஷால் ஆனந்த் கன்வதி தெரிவித்துள்ளார். UPI 123Pay என்பது சாதாரண செல்போன்கள் மூலம் உடனடியாக பணம் செலுத்த பயன்படும் முறையாகும். இதன் மூலம் பயனர்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே UPI பரிவர்த்தனைகளைச் மேற்கொள்ளலாம்.

IRCTC AskDISHA

ஐஆர்சிடிசியின் மற்றும் இந்திய ரயில்வேயின் AI மெய்நிகர் உதவிக்கான AskDISHA விலும் வாய்ஸ் கமாண்ட் பேமெண்ட் அம்சம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் வாலட்கள் போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்.

click me!