ஒயின் என்பதும் மதுவகைகளில் ஒன்றுதான். இதில் ஒயிட், ரெட் என இரண்டு வகை ஒயின்கள் உள்ளன. ஒயிட் ஒயினை தான் இதயத்திற்கு நன்மை செய்யும் என்கின்றனர். ரெட் ஒயினை பொருத்தவரை பாலிபினால்கள் அதிகம் உள்ளதால் வயதாவதை தடுத்து இளமையாக இருக்க உதவுமாம். அதனால் தான் பெண்கள் ரெட் ஒயினை விரும்புகின்றனராம்.
ரெட் ஒயினை அளவாக எடுத்து கொண்டால் அதிலுள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலில் நல்ல கொழுப்பை சேர்க்கும். இது தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இரத்த நாளங்களை ஒழுங்கு செய்து செல் அடுக்குகளின் இயக்கத்தையும் மேம்படுத்தும். ஆனால் இது மிதமாக அருந்தும்போது கிடைக்கும் பலன் தான்.
இதையும் படிங்க; உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?
ஒயினை அடிக்கடியோ, அளவுக்கு அதிகமாகவோ எடுத்து கொண்டால் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகமாக்கி புற்றுநோய் வரவழைக்கலாம். ஏற்கனவே புற்றுநோய் இருந்தால் அதிகமாகலாம். ஆனாலும் ஒரிரு ஆண்டுகள் ஆல்கஹால் எடுத்து கொள்வதால் புற்றுநோய் வராது. ஆண்டுக்கணக்கில் அருந்தும்போதுதான் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மதுவில் கலோரிகளும் அதிகம் காணப்படுகிறது. ஒரு கிராம் மதுவை எடுத்து கொண்டால் 7 கலோரிகள் அதில் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும். ஒயினில் 20 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. இது பியரை (Beer) விட அதிகம்.
.
நீங்கள் இதுவரை மது அருந்தாத நபராக இருந்தால் இனியும் அருந்தாதீர்கள். ரெட் ஒயின் அருந்துபவர்கள் எனில் மிகவும் கவனமாக 100 மி.லிக்கும் குறைவாக அருந்துவது அல்லது படிப்படியாக குறைத்து கொள்வது நல்லது. ஆல்கஹால் உடலை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறினாலும் ஆல்கஹாலை விடவும் உடலை மேம்படுத்த வேறு உணவுகள் உள்ளன என்பதுதான் உண்மை. ஆல்கஹால் அதிகமாக அருந்தினால் புற்றுநோய், பக்கவாதம், இதய பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் நோய்கள் போன்றவை ஏற்படும். கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க; எப்பவும் சோர்வா இருக்கா? புரதச்சத்து குறைபாடா இருக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க தெம்பா ஆகிடுவிங்க!