Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை

Published : Dec 09, 2025, 06:42 PM IST

குளிர்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
16
Why You Should Eat Ladies Finger in Winter ?

குளிர்காலத்தில் செரிமானம் மந்தமாவது, நீர்ச்சத்து குறைவது, சரும வறட்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். எனவே குளிர்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

26
உடலுக்கு இயற்கையான ஈரப்பதம்

வெண்டைக்காயில் உள்ள மியூசிலேஜ் உடலுக்கு நன்மை தரும். இது உடலுக்கு இயற்கையான ஈரப்பதத்தை அளித்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது. குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

36
நோய் எதிர்ப்பு சக்தி

குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள், சளி, இருமல், ஒவ்வாமை அதிகம் வரும். வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

46
வயிறு தொடர்பான பிரச்சனைகள்

குளிர்காலத்தில் நீர் அருந்துவது குறைவதால், மலச்சிக்கல் ஏற்படும். வெண்டைக்காயில் உள்ள மியூசிலேஜ் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதன் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. 

56
சரும ஆரோக்கியத்திற்கு

குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும். வெண்டைக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை அளித்து, வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றன. 

66
ஆற்றல் அதிகரிக்க

குளிர்காலத்தில் உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, கே, மாங்கனீஸ் போன்றவை உடலுக்குத் தேவையான ஆற்றலை అందిக்கின்றன. 

Read more Photos on
click me!

Recommended Stories