Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்

Published : Dec 09, 2025, 06:29 PM IST

குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Benefits of Green Peas

குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் பட்டாணி புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சூப்பர்ஃபுட். இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஆதரித்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

24
பச்சை பட்டாணியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

பட்டாணியில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்துள்ளன. இதில் அதிக புரதம் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

34
பச்சை பட்டாணி ஆரோக்கிய நன்மைகள்
  • பச்சை பட்டாணியில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 
  • இதில் நிறைந்திருக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது குறிப்பாக வயதாகும் போது எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க உதவும்.
  • இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
  • பச்சை பட்டாணியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது.
  • நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வயிறை நீண்ட நேரம் விரிவாக வைத்திருக்கும், திருப்தி உணர்வை தருகிறது. இதனால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்கப்படுவதால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
44
பச்சை பட்டாணியை எப்படி சாப்பிட வேண்டும்?

பட்டாணியை 5-6 நிமிடங்கள் வேகவைத்து, வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். குறைந்த எண்ணெயில் வதக்கியோ அல்லது குழம்புகளில் சேர்த்தோ சாப்பிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories