வெள்ளரிக்காய் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.!

First Published | May 11, 2023, 1:55 PM IST

வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே உண்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு காணலாம். 

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து எவ்வாறு குறையும். இதை சரி செய்ய உணவு வகைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்பதை பழக்கமாக வேண்டும். இளநீர், எலுமிச்சை பானம் ஆகியவற்றை குடிப்பதையும் வழக்கமாக வேண்டும். கோடையில் அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால் வெள்ளரிக்காயை தோலை நீக்காமல் உண்பதால் என்னாகும் தெரியுமா? மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

வெள்ளரிக்காவை சரும ஆரோக்கியம், உடல் குளுமை போன்ற பல நன்மைகளுக்கு பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. வெள்ளரிக்காயில் 30 கலோரிகள் மட்டும்தான் காணப்படுகின்றது. அதனால் எடையை கூட்டாது. 

Tap to resize

வெள்ளரியில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மாங்கனீசு, ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். வெள்ளரிக்காயில் 'வைட்டமின் கே' அதிகமாக காணப்படுவதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். நம் உடலில் ரத்தம் உறைவதற்கு 'வைட்டமின் கே' சத்து தான் அத்தியாவசியமாக தேவைப்படும். 

வெள்ளரிக்காயில் காணப்படும் லிக்னான்கள், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இதய நோய்கள், புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வெள்ளரியில் இருக்கும் பீட்டா கரோட்டின் மாதிரியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இளமையாக வைத்திருக்கும். 

வெங்காயம் சீக்கிரம் கெட்டு போகாமல், முளைக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் வெள்ளரிக்காயை தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முந்தைய காலங்களில் வெள்ளரிக்காயை தோலுடன் உண்பது ஆரோக்கியம் என சொல்லப்பட்டு வந்தது. ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் விளைவிக்கும் உணவு பொருள்களின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிப்பது குறைவாக இருந்தது. ஆனால் இப்போது மகசூலை கூட்ட உணவு பொருட்கள் மீது ரசாயனங்கள் அதிகமாக தெளிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இப்படி ரசாயனங்கள் தெளிக்கப்பட்ட வெள்ளரிக்காயை தோலை நீக்காமல் உண்பதால் உடலுக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அதை தோல் நீக்கி உண்பதே சிறந்தது. 

இதையும் படிங்க: ரத்தசோகை முதல் கெட்ட கொழுப்பு வரை.. 'கருப்பு நிற உலர் திராட்சை' உண்பதால் நீங்கும் பிரச்சனைகள்!!

Latest Videos

click me!