கோடையில் ரொமான்ஸ்.. ஆனா படுக்கையில் இந்த விஷயத்துல கவனம் இருக்கணும்! மறந்தால் அவ்ளோ தான்!!

First Published | May 11, 2023, 12:02 PM IST

கோடைகாலத்தில் உறவு கொள்ளும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியான உறவுக்கு அடிப்படையாக இருக்கும். ஏனென்றால் உடலும் உள்ளம் இணைந்தால் தான் அந்த உறவு முழுமை பெறும். ஒவ்வொருவருக்கும் பாலியல் ஆசைகள் இருக்கும். ஆனால் கோடையில் பாலியல் ஆரோக்கியம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் இந்த காலக்கட்டத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அந்தரங்க உறுப்புகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்தரங்க உறுப்பை கோடையில் சரியாக பராமரிக்காமல் விட்டால், வியர்வை அல்லது வறட்சி, வெப்பம் அதிகமாகி செக்ஸ் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். 

கோடையில் சிறுநீர் பாதை தொற்று மற்றும் சரும நோய் போன்ற பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளின் ஆபத்து அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் இந்த பிரச்சனைகள் வரும். கோடை காலத்தில் வீட்டில் வெப்பம் அதிகரிப்பதால், வியர்வை நீண்ட நேரம் தோலில் தங்கிவிடும். இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. அத்தகைய நேரத்தில் உடலுறவு கொள்ளும்போது அந்தரங்க உறுப்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தோலுடன் தோல் உரசி நெருக்கமாக தொடர்பு கொள்வது பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவ அனுமதிக்கிறது. இது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலுறவுக்கு முன் உங்கள் பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்வது நல்லது. உடலுறவுக்குப் பிறகு அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்வதும் முக்கியம்.


கோடைக்காலத்தில் அதிக வியர்வையால் உடலில் நீர்ச்சத்து குறையும். நீரிழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுறவுக்கு நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியமானது. உடலுறவு என்பது உடலில் இருந்து அதிக வியர்வையை ஏற்படுத்தும் உடல் செயல்பாடுகளில் ஒன்றாகும். அதனால்தான் உடலில் நீர்ச்சத்து இருந்தால், உடலுறவின் போது உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் உடலில் நீரேற்றம் இல்லாதபோது உங்களுக்கு ஆற்றல் இருக்காது. இதனால் பாலியல் ஈடுபாடு குறையும். கவனம். உடலுறவுக்கு பின்னர் நன்றாக தண்ணீர் குடியுங்கள். 

கோடையில் அதிகமாக வெப்பநிலை இருந்தால் பாலுணர்வு குறையும். இந்த சமயம் மக்கள் விரைவாக சோர்வடைவார்கள். அதனால் உங்கள் அறை வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருப்பது முக்கியம். சமைத்த பிறகு அல்லது வெளியில் சென்று வந்த பிறகு அல்லது ஏதேனும் வேலை செய்த பிறகு வியர்வை அதிகமாக சுரக்கும். உடல் வெப்பநிலை சாதரணமாக வந்த பிறகு, உடலுறவு கொள்வது பெரிய பிரச்சனையாக இருக்காது. குளித்துவிட்டு உடலுறவு கொள்ளலாம். 

கோடைக்காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு (STIs) வழிவகுக்கும். இது தேவையற்ற கர்ப்பத்தின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் சாதாரண உடலுறவு கொள்ள விரும்பினால், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் ஆணுறையை எடுத்துக் கொள்ளுங்கள். உடலுறவுக்கு முன் சுகாதாரமாக இருங்கள். உங்கள் அந்தரங்க பாகங்களை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு தொற்று ஏற்படலாம். 

நீங்களும் உங்கள் துணையும் வாய்வழி உடலுறவை அனுபவிக்க விரும்பினால், நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும். கோடைகாலத்தில் அந்தரங்க உறுப்புகளில் பாக்டீரியாக்கள் கொண்டாட்டமாக வாழும். அதனால்தான் கோடையில் பிறப்புறுப்பை அடிக்கடி கழுவி உலர வைக்க வேண்டும். உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ வாயில் தொற்று அல்லது புண் இருந்தால் வாய்வழி உடலுறவில் ஈடுபடாதீர்கள். ஏனெனில் அது உங்கள் அந்தரங்க உறுப்பையும் பாதிக்கிறது. 

பெண்களின் அந்தரங்க உறுப்பான யோனி அல்லது ஆண்களின் அந்தரங்க உறுப்பில் அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் வாய்வழி உடலுறவில் ஈடுபடாதீர்கள். வாய்வழி உடலுறவுக்கு முன், உங்கள் யோனியை மிதமான சூடுள்ள நீரில் கழுவி கொள்ளுங்கள்.

ஆண்கள் தங்கள் ஆண்குறி மேல்தோலை அகற்றி, உள் தோலை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வெளியில் இருந்து சுத்தம் செய்தால், உள்தோலில் பாக்டீரியா, கிருமிகள் மறைந்து கொள்ளும். 

Latest Videos

click me!