
சில சமயங்களில், போதுமான அளவு தண்ணீர் குடித்தாலும் மீண்டும் தாகம் எடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது ஏன் என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் இது உண்மையில் சாதாரண விஷயம் அல்ல, இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் கூட, போதுமான அளவு தண்ணீரை குடித்தாலும் மீண்டும் மீண்டும் தாகத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவு கூட மீண்டும் மீண்டும் தாகத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகிறது. அதாவது அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அது நீரை வெளியேற்ற தூண்டும். இதன் விளைவாக உடலானது வறண்டு, மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கும் உணர்வை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட், துரித உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக உள்ளன.
சர்க்கரை நோய் காரணமாகவும் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் மீண்டும் தாகம் எடுக்கலாம். கட்டுப்பாடுத்த சர்க்கரை நோயால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சிறுநீரகங்கள் நீரை அதிகமாக வெளியேற்றும். இதன் விளைவாக உடலானது நீரிழப்புக்கு ஆளாகி தாகத்தை அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கு இது கூட அறிகுறி. ஆகவே, உங்களுக்கு தாகம் அதிகமாக ஏற்பட்டால், சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்று ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோதியுங்கள்.
சில மருந்துகளின் விளைவுகளால் கூட தாகம் அதிகமாக ஏற்படலாம். அலர்ஜி, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் சீக்கிரமாகவே வாயை வறண்டு போக செய்துவிடும். இதனால் மீண்டும் மீண்டும் தாகம் ஏற்படும்.
அதிகப்படியான வியர்வை அல்லது உடற்பயிற்சி காரணமாகவும் மீண்டும் தாகம் எடுக்கலாம். அதாவது உடற்பயிற்சி அதிகமாக செய்யும் போது உடல் அதிகமாக வியர்க்கும். வியர்வை மூலம் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகின்றது. வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை ஈடு செய்ய முடியாது. அதனால் மீண்டும் தாகம் ஏற்படும் இது போன்ற சூழ்நிலையில் எலக்ட்ரோலைட் கலந்த பானங்கள் குடிக்கலாம் அல்லது இளநீர் அருந்துவது நல்லது.
அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் காரணமாக கூட சில சமயங்களில் தாக உணர்வு அதிகரிக்கும். அதாவது மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடல் பல்வேறு ஹார்மோன்களை வெளியிடும். இதனால் உடலில் நீர் சமநிலை பாதிக்கப்படும்.
குறிப்பு : ஆகவே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் மீண்டும் உங்களுக்கு தாகம் எடுத்தால் மேலே சொன்ன ஐந்தில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பொருந்தினால், உடனே அதை சரி செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.