Lines on Nails : நகங்களில் வரும் கோடுகள்; நோய்களின் அறிகுறி தெரியுமா?

Published : Jun 18, 2025, 12:58 PM ISTUpdated : Jun 18, 2025, 01:09 PM IST

உங்களது நகங்களில் கோடுகள் அதிகமாக தெரிந்தால் அது சாதாரணமான விஷயம் அல்ல. அது தீவிர நோய்த்தொற்றின் அறிகுறியாகும்.

PREV
15
நகங்களில் கோடுகள்

நம் உடலில் ஏதாவது ஒரு கோளாறு ஏற்பட்டால், அது ஏதாவது ஒரு விதத்தில் அதை வெளிப்படுத்திவிடும். அந்த வகையில் நம் நகங்களில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் உடலில் நோய்கள் இருப்பதற்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நகங்கள் இயற்கையாகவே விரல்களில் படைக்கப்பட்டது. ஆகவே, நம்முடைய உடலில் ஏதாவது பெரிய நோய்கள் ஏற்படால் அதை வெளிப்படுத்தும் விதமாக நகங்களில் நிறமாற்றங்கள் தோன்றும். அந்த வகையில் நகங்களில் கோடுகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வயதாகுதல், உடல்நல பிரச்சனைகள் அல்லது உடலில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து இல்லாமல் போன்றவை அடங்கும். ஆனால் உண்மையில் நகங்களில் கோடுகள் ஏன் தோன்றுகிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
நகங்களில் கோடுகள் தோன்றுவது ஏன்?

உங்களது நகங்களில் நீண்ட மற்றும் வெள்ளை நிற கோடுகள் தோன்றினால் அது வயதானதற்கான அறிகுறி. வயது கூட உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும் இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உண்மையில், நகங்களில் பாதியளவு கோடுகள் தோன்றினால் அது வயதாவதன் காரணம். இது ஆபத்தானது இல்லை. அதுவே கோடுகள் ரொம்பவே ஆழமாகவும், நகங்கள் உடைந்து கருப்பாகவும் மாறிவிட்டால் அது ஆபத்தானது. இந்த அறிகுறியானது பல உடல்நல பிரச்சினைகளை குறிக்கின்றது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.

35
நகங்களில் நேர்கோடுகள் அல்லது செங்குத்து:

உங்களது நகங்களில் நேர்கோடுகள் லேசாக இருந்தால் வயதான காலத்தில் தோன்றும் பொதுவான கோடுகள் தான். இந்தக் கோடுகள் ஆபத்தானவை அல்ல. அதுவே கோடுகள் மிகவும் ஆழமாக இருந்தாலோ, நகங்கள் உடைந்து காணப்பட்டாலோ அல்லது நகங்களில் நிறமாற்றம் ஏற்பட்டாலோ அது சில உடல்நல பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கும். லிச்சென் பிளான்ஸ் என்ற தன்னுடன் தாக்க நோயால் தான் நகங்களில் கோடுகள் தோன்றுகின்றன. இவை மன அழுத்தம் மற்றும் வேறு சில நோயாலும் அதிகரிக்கும். சில சமயங்களில் மிகவும் வறண்ட சருமம், தோல் அலர்ஜி, ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்சனைகளாலும் நகங்கள் மெல்லியதாகி எளிதில் உடைந்து போகும்.

45
நகங்களில் வெள்ளை கோடுகள்:

மருத்துவ ரீதியில் 'லுகோனிச்சியா ஸ்ட்ரைட்டா' (leukonychia striata) என்று அழைக்கப்படும் இந்த கோடுகள் நகத்தில் ஏற்படும் பூஞ்சை, பரம்பரை நோய்கள், சில நோய்கள் மற்றும் சில மருந்துகள் காரணமாக நகங்களில் தோன்றலாம். இந்த கோடுகள் உங்களது நகத்தில் அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

நகங்களில் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் :

இந்த கோடுகள் மருத்துவர் ரீதியாக மெலனோனிச்சியா (melanonychia) என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக மெலனின் என்னும் நிறமி அதிகரிப்பதால் ஏற்படும். இது இயற்கையாகவே சிலருக்கு தோன்றும் அல்லது வேறு சில உடல்நல பிரச்சனைகளின் அறிகுறியாகளாலும் தோன்றும்.

55
நகங்களை கருப்பு கோடுகள் :

உங்களது நகங்களில் கருப்பு கோடுகள் தோன்றினால் அது உடலில் வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. ஆகவே ஊட்டச்சத்துக்கள் இருந்த உணவுகளை சாப்பிடுங்கள். ஒருவேளை இந்த கோடுகளால் நகங்களில் ரத்தப்போக்கு அல்லது வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

நகங்களில் வெள்ளை கோடுகள் :

உங்களது நகங்களில் வெள்ளை கோடுகள் அல்லது லேசான பட்டை போன்று வெள்ளை நிறத்தில் இருந்தால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது சிறுநீர் செயலிழப்பு போன்ற சில உடல்நல பிரச்சனை அறிகுறியாக இருக்கும். எனவே, நகங்களில் வெள்ளை கோடுகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories