தாமதமான உறக்கம்
இரவில் தாமதமாக உறங்கினால் மூளையில் பாதிப்பை உண்டாக்கும். ஏனெனில், மூளைக்கு குறிப்பிட்ட நேர ஓய்வு தேவைப்படும். அந்த ஓய்வு நேரத்தை தராமல் நாம் விழித்திருப்பது மூளை மட்டுமல்ல கண்களுக்கும், உடலுக்கும் கூட மிகவும் ஆபத்து தான்.
புகைப்பழக்கம்
புகைப்பழக்கத்தால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இதனால், மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
துரித உணவுகள்
துரித உணவுகள், குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதனால், சுவை குறைகிறது. இதனை தவிர்ப்பதற்காகவும், அதன் சுவையை தக்க வைக்கவும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் நறுமணம் வண்ணங்கள் போன்றவை சேர்க்கப்படுகிறது. இது மனித உடலுக்கு கேடு விளைவிக்கும். ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரையை அதிகமாக பயன்படுத்தினால் மூளைக்கு தீங்காக அமைகிறது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லையெனில், இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், மூளையையும் பாதிக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகமாக சாப்பிடுதல்
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடுதல், உடல்பருமன் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளும் உண்டாகும். மேலும், கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும்.
சிலர் தடிமனான போர்வையால், தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு, தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவ்வாறு தூங்கும் போது, சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனின் அளவு குறைந்து, மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.