கிட்னி பெயிலியர் ஆனவங்களுக்கு புது சிறுநீரகத்தை வைத்த பிறகு, அவங்க பழைய சிறுநீரகத்தை என்ன செய்வார்கள் தெரியுமா

First Published | Mar 30, 2023, 6:28 PM IST

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளியின் பாதிப்புக்குள்ளான சிறுநீரகத்தை மருத்துவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இந்த பதிவு விளக்குகிறது. 

சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்புக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள். ஒரு நபருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் இரண்டு பொதுவான காரணங்கள் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தான். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் அது சிறுநீரகத்தின் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதனால் சிறுநீரகம் வேலையைச் செய்வதை நிறுத்துகிறது. 

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தவிர, அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தினாலும் சிறுநீரக பாதிப்பு வரும். உப்பு, இனிப்பு அதிகமாக சாப்பிட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதிகமான மது குடித்தால் சிறுநீரக பாதிப்பு வரும். 

Latest Videos


சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

சிறுநீரக செயலிழப்பின் முதல் நிலையில் எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாது. ஆனால் சில நாட்களில் இந்த சின்ன சின்ன அறிகுறிகள் தெரிய தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

1. அதிகப்படியான சோர்வு

2. குமட்டல், வாந்தி

3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

4, கால்கள், கணுக்கால் வீக்கம்

5. வயிறு, முதுகு வலி

6. தசைப்பிடிப்பு 

7. கண்களுக்கு அருகில் வீக்கம்

8. பசியிழப்பு 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எப்படி செய்வார்கள்? 

Kidney.org இன் படி, சிறுநீரகத்தை மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை தான் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது ஆரோக்கியமான சிறுநீரகம் உங்கள் உடலில் வைக்கப்படுகிறது. அந்த சிறுநீரகம் இறந்த நபரின் உடலில் இருந்து அல்லது உங்களுக்கு தானம் செய்ய விரும்பும் ஆரோக்கியமான நபரின் உடலில் இருந்து எடுக்கப்படும். பல்வேறு ஆய்வுகளில், டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளை விட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பழைய அல்லது பாதிப்புக்குள்ளான சிறுநீரகங்களை என்ன செய்வார்கள் தெரியுமா? 

இதையும் படிங்க: வாழைப்பழம் தான நல்லதுனு சொல்வாங்க.. ஆனா வாழைத்தண்டு சாறு 1 டம்ளர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

பொதுவாக மருத்துவர்கள் பயனற்ற சிறுநீரகத்தை உடலில் இருந்து வெளியே எடுக்கவேமாட்டார்களாம். அப்படியே உடலுக்குள் வைத்துவிடுகிறார்கள் என சொல்லப்படுகிறது. UCSF இன் அறுவை சிகிச்சைத் துறையின் தகவல்களின்படி, புதிய ஆரோக்கியமான சிறுநீரகம் அடிவயிற்றின் கீழ் முன்னோக்கி இடமாற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பயனற்ற சிறுநீரகத்தின் அளவு மிகப் பெரியதாகிவிட்டாலோ அல்லது கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தினாலோ அதை வெளியே எடுத்து விடுவார்கள். 

இதையும் படிங்க: samantha : சமந்தா பகிர்ந்த 'மயோசிடிஸ்' நோயின் பயங்கரமான அறிகுறிகள்.. 8 மாசமா இவ்வளவு கஷ்டபடுகிறாரா?

click me!