வாக்கிங் போக டைம் இல்லையா? வெயிட் குறைக்க இதோ 6 'ஸ்மார்ட்' வழிகள்!

Published : May 26, 2026, 03:43 PM IST

வாக்கிங் செல்ல நேரமில்லையா? கவலையை விடுங்கள்! கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமலேயே, மிக எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும். உங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையிலான சில எளிய மற்றும் சூப்பர் டிப்ஸ்கள் இதோ, உடனே ட்ரை பண்ணிப் பாருங்க!

PREV
16
போன் பேசிக்கிட்டே ஒரு மினி வாக்!

"ஆபீஸ் காலோ அல்லது பிரண்ட்ஸ் கூட அரட்டையோ... போன் பேசும் போது ஒரு இடத்துல உட்காராதீங்க. போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டு அல்லது ஹெட்போன் மாட்டிட்டு, வீட்டின் ஹாலிலோ அல்லது ஆபீஸ் காரிடாரிலோ நடந்து கொண்டே பேசுங்கள். உங்களுக்கே தெரியாம 20 நிமிஷம் நடந்திருப்பீங்க!"

26
லிஃப்டுக்கு 'டாட்டா' சொல்லுங்க!

"ஆபீஸ் அல்லது அப்பார்ட்மெண்ட்டில் லிஃப்ட் பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள். தினமும் 3 அல்லது 4 மாடிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, அரை மணி நேரம் வாக்கிங் போவதற்குச் சமம். இது தொப்பையைக் குறைக்க உதவும் பெஸ்ட் மேஜிக்!"

36
சமையலறையில் உடற்பயிற்சி:

"சமையலறையில் பால் கொதிக்கும் வரை அல்லது மைக்ரோவேவ் அவனில் உணவு சூடாகும் வரை சும்மா நிற்காதீங்க. அந்த கேப்பில் 10 'ஸ்குவாட்ஸ்' (Squats) அல்லது கைகளை நீட்டி எக்சர்சைஸ் செய்யுங்க. நேரமும் மிச்சம், உடம்பும் ஃபிட்!"

46
வீட்டை சுத்தப்படுத்துவதும் ஒரு ஒர்க்அவுட் தான்!

"வார இறுதி நாட்களில் வீட்டை ஒட்டடை அடிப்பது, வீட்டைத் துடைப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நீங்களே செய்யுங்க. கடுமையான ஜிம் ஒர்க்அவுட்டை விட இதில் அதிக கலோரி எரியும்.

56
சாப்பிட்ட பின் 100 அடிகள்!

"காலை அல்லது இரவு உணவு சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்லக் கூடாது. சாப்பிட்டு முடித்ததும், வீட்டின் உள்ளேயே வெறும் 100 அடிகள் (100 Steps) மெதுவாக உலா வாருங்கள். இது செரிமானத்தை அதிகரித்து, கொழுப்பு தங்குவதைத் தடுக்கும்."

66
தண்ணீருக்காக எழுந்து செல்லுங்க :

"தண்ணீர் குடிக்கவோ, டிவியின் ரிமோட்டை எடுக்கவோ மற்றவர்களைக் கூப்பிடாதீங்க. நீங்களே எழுந்து போய் எடுங்க. சின்னச் சின்ன விஷயங்களுக்கு உடலை அசைப்பதே கலோரியை எரிக்க உதவும் எளிய வழி!"

Read more Photos on
click me!

Recommended Stories