வெயிட் லாஸ் செய்ய போறீங்களா? நீங்க செய்யும் இந்த தப்ப முதல்ல நிறுத்துங்க!

Published : May 25, 2026, 05:30 PM IST

உடல் எடையை குறைக்க நினைத்ததும் பலர் யூடியூபில் டயட் தேடி, "நாளை முதல் சோறே வேண்டாம், வெறும் ஜூஸ் தான்" என அவசர முடிவெடுக்கிறார்கள். ஆனால், உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்ற வேகத்தில் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்கள் மறந்துவிடுகிறார்கள்

PREV
16
தினமும் எடையை செக் பண்ணாதீங்க!

காலையில் எழுந்ததும் வெயிங் மெஷினில் ஏறி நிற்பதை முதலில் நிறுத்துங்கள். உடலில் உள்ள நீரின் அளவு, தசை வளர்ச்சி போன்றவற்றால் எடை தினமும் மாறும். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செக் பண்ணுங்க. மன அழுத்தம் குறைஞ்சாலே எடை சீக்கிரம் குறையும்!

26
கொழுப்பை மொத்தமாக ஒதுக்காதீங்க!

உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற 'நல்ல கொழுப்புகளை' (Healthy Fats) உணவில் சேர்க்காமல் விட்டுவிடாதீர்கள். மூளையின் செயல்பாட்டிற்கும், ஹார்மோன் சமநிலைக்கும் நல்ல கொழுப்புகள் மிகவும் அவசியம்!

36
தூக்கத்தை தியாகம் செய்யாதீங்க

எவ்வளவுதான் ஜிம்முக்கு போய் வெயிட் தூக்கினாலும், ராத்திரி ஒழுங்கா தூங்கலைனா வெயிட் குறையாது. தூக்கமின்மை 'கார்டிசோல்' (Cortisol) என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோனை சுரக்கச் செய்து, தொப்பையை இன்னும் அதிகமாக்கிடும். தூக்கமே சிறந்த மருந்து!

46
ஜூஸ் குடிக்கிறீங்களா? ஜாக்கிரதை!

சாப்பாட்டை குறைத்துவிட்டு, "நான் வெறும் பழச்சாறு தான் குடிக்கிறேன்" என்பவர்கள் கவனத்திற்கு! பழங்களை ஜூஸாக குடிக்கும் போது அதன் நார்சத்து அழிந்து, சர்க்கரை நேரடியாக ரத்தத்தில் கலக்கும். ஜூஸுக்குப் பதிலா பழங்களை அப்படியே கடித்து சாப்பிடுங்க.

56
பட்டினி கிடப்பது டயட் அல்ல!

நீங்கள் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் போது, உடல் 'பஞ்ச காலம்' வந்துவிட்டதாக நினைத்து, இருக்கும் கொழுப்பை அப்படியே சேமித்து வைக்க ஆரம்பித்துவிடும் . அதனால், பட்டினி கிடக்காமல் 3 வேளையும் சத்தான உணவை அளவோடு சாப்பிடுங்கள்.

66
சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு ட்ரிக்!

மதிய உணவோ, இரவு உணவோ சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பெரிய கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடியுங்கள். இது உங்களை ஓவர்-ஈட்டிங் (Over-eating) செய்ய விடாமல் தடுத்து, செரிமானத்தையும் தூண்டும்!

Read more Photos on
click me!

Recommended Stories