Weight loss tips: நெய்யுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்; முயற்சித்துதான் பாருங்களேன்!!

First Published | Aug 30, 2023, 2:08 PM IST

நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று தவறுதலாக பலரும் நம்பிக் கொண்டு உள்ளனர். ஆனால், இது உண்மையல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன. நெய்யுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடாது. எந்தெந்த பொருட்களுடன் நெய் கலந்து சாப்பிட்டால் அதிக நன்மைகளைத் தரும் என்பதைப் பார்க்கலாம்.

Ghee with Cinnamon

இலவங்கப்பட்டையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு எதிராக செயல்படும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்கும். நெய்யுடன் பயன்படுத்தும்போது இதன் பலன் அதிகரிக்கும். முல் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் சில இலவங்கப்பட்டையை சேர்த்து, 4 முதல் 5 நிமிடங்கள் சூடாக்கி, தீயை அணைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.

Ghee with Turmeric

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு உள்ளது. எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்காக உதவும். மஞ்சளை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலில் அனைத்து விதமான வீக்கமும் குறையும். முதலில் கிண்ணத்தில் 1 கப் நெய், 1 தேக்கரண்டி மஞ்சள், 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் சேமித்து யன்படுத்தவும்.

Tap to resize

Ghee with Tulsi

துளசி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இது பார்வையை மேம்படுத்தும். ஒரு பானையில் நெய்யுடன் சிறிது துளசி இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தவும்.
 

Latest Videos

click me!