இரவில் இந்த அறிகுறிகள் வருதா? இதயம், சிறுநீரகம் ஆபத்துல இருக்குன்னு அர்த்தம்!

Published : Jun 26, 2025, 04:23 PM ISTUpdated : Jun 26, 2025, 04:24 PM IST

உங்களது இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் இரவில் தோன்றும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14

ஒவ்வொரு இரவும் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்கிறீர்களா? தூங்கும்போது மூச்சு விடுவதில் சிரமப்படுகிறீர்களா? இரவு சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? மற்றும் இரவில் அதிகமாக வியர்கிறதா? இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தினமும் நடக்கிறது என்றால் அவற்றை அசால்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஏனென்றால் அவள் உங்களது இதயம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் ஏற்படும் பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

24

இரவில் மட்டுமே இந்த அறிகுறிகள் தோன்றுவதால் பலரும் புறக்கணிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவை இதையே செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்றவற்றிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.

அது மட்டும் இல்லாமல் இரவில் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறி மற்றும் இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

34

இது குறித்து இதய நோய் நிபுணர் ஒருவர் கூறுகையில், இரவில் நாம் தூங்கும்போது திரவம் ரத்தத்துடன் கலந்து சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக தொடர்பான பிரச்சனை இருந்தால் சிறுநீரகங்கள் அவற்றின் வடிகட்டும் திறனை இழந்து விடும். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். அதுவும் குறிப்பாக இந்த பிரச்சனை இரவில் மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்கும் போது கால்களில் வீக்கம், மூச்சு திணறல், சோர்வு போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

44

அதுமட்டுமின்றி இரவில் சுவாசிப்பதில் சிரமமாக உணர்வதற்கு காரணம், நுரையீரலில் திரவம் படிவதால் உங்கள் இதயமானது இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாமல் போகும்.

அதுபோல இரவில் அதிகமாக உயர்த்தால் உங்களுடைய இதயம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அர்த்தம் . ஏனெனில் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி தான் இது. இந்த சமயத்தில் மார்பு வலி, இதயம் அழுத்தம் மற்றும் இறுக்கம் ஏற்பட்டால் உங்களுக்கு இதய பிரச்சனை அல்லது உயரத்தை அழுத்த பிரச்சனை இருக்கலாம் என்று அர்த்தம்.

குறிப்பு : மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் நீங்கள் இரவில் அனுபவித்தால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் சேர்ந்து கலந்தாலோசிக்கவும். இல்லையெனில் உங்களுடைய உயிருக்கு தான் ஆபத்து.

Read more Photos on
click me!

Recommended Stories