உடல் எடையை குறைப்பதுதான் இன்றைய தலைமுறையினர் பலருக்கு குதிரை கொம்பாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவு பழக்கம் எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் சிலருக்கு உடல் எடையை குறைப்பது கடினமாக இருக்கும். அவர்கள் செய்யும் தவறு உடல் எடையை குறைக்க அவர்கள் செய்யும் முயற்சியை தொடர்ந்து செய்யாததுதான்.
உடல் எடையை குறைப்பதில் பிடிவாதமாக இருக்க வேண்டும். தொடர்ந்து செய்யும் முயற்சிகள் தான் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்கு சான்றாக பாரத்பே இணை நிறுவனர் அஷ்னீர் க்ரோவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தான் உடல் எடை குறைக்க உதவிய இரண்டு மந்திரங்களை குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கமும், பிடிவாதமும் தான் அந்த மந்திரங்கள். இத்துடன் உணவு குறித்து கவனமாக இருக்க வேண்டியதையும் குறிப்பிட்டுள்ளார்.
உடலுக்கு நாம் கொடுக்கும் உணவு தகவல் போல, செல்கள், திசுக்கள், இரத்தம் எல்லாவற்றின் தரத்தையும் தீர்மானிக்கிறது. ஆகவே உணவாக நாம் என்ன எடுத்து கொள்கிறோம் என்பதும், அது என்ன பலனளிக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் முதலில் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். பால் பொருள்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை தவிர்க்கவேண்டும். நமக்கு பிடித்த உணவுகளாக இருந்தாலும் அவற்றை தவிர்க்கும் தைரியம் வேண்டும். உடல் எடையை குறைக்க முடிவு செய்தால் அதற்காக திட்டமிட்டு, குறிப்பிட்ட கால அளவிற்குள் அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நிச்சயம் நினைத்த எடைக்கு மாற இது உதவும் என்கிறார் அஷ்னீர் க்ரோவர்.
இதையும் படிங்க; கோழிக்கறியை கழுவினால் பாக்டீரியா பரவுமா?