முளைகட்டிய பயிர்வகைகள் ஆரோக்கியமானது. பச்சைப் பயிறு, கொண்டக் கடலை போன்றவை முளைகட்டிய பின் சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக கிடைக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை செரிந்து காணப்படும். அதுமட்டுமின்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டும். இவற்றில் குறைந்த கலோரிகள் தான் காணப்படும். ஆனால் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.