Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்

Published : Dec 10, 2025, 02:14 PM IST

நீங்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமாகவும், உங்கள் இதயம் பாதுகாப்பாகவும் இருக்க விரும்பினால் 40 வயதிற்கு பிறகு இந்த மூன்று பழக்கங்களை உடனே நிறுத்துங்கள்.

PREV
14
Heart Disease After 40

உலகளவில் தற்போது பலரும் இருதய நோயால் மரிக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாகவும், நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழவும் 40 வயதை கடந்த பிறகு சில பழக்க வழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மது அருந்துதல் :

மது அருந்துதல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இதய நோய், கல்லீரல் நோய் போன்ற ஆபத்தான நோய்களை மட்டுமே அதிகரிக்கும். இதுதவிர மனசோர்வு, பதட்டம் போன்ற பிரச்சனைகளை வழிவகுக்கும். எனவே உங்கள் இதயம் உட்பட்ட ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க மது குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

34
புகைப்பிடித்தல் :

உங்கள் இதயத்தை பாதுகாக்க விரும்பினால் முதலில் புகைபிடிப்பதை கைவிடுங்கள். புகைப்பிடித்தல் இதயத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். குறிப்பாக இது மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்யும். புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றது. எனவே முடிந்தவரை சீக்கிரமாகவே புகைபிடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

44
தூக்கமின்மை :

தூக்கமின்மை பிரச்சனை, அதுவும் நீண்ட காலமாக அவதிப்படுபவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க தூக்கம் அவருக்கு ரொம்பவே முக்கியமானது. அதுவும் வயதான காலத்தில் இது மிகவும் அவசியம் என்கின்ற நிபுணர்கள். ஆனால் மோசமான தூக்கம் இதயம் செயலிழப்புக்கு வழிவகுக்கும். அதுவும் ஒழுங்கற்ற தூக்கம் 6 மாதத்திற்குள் இதய பிரச்சனையை இரட்டிப்பாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சரியான நேரத்தில் தூங்கி எழுவது மிகவும் முக்கியம்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை 40 வயதிற்கு பிறகு நீங்கள் கைவிட்டால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். நீங்களும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories