Hair Care : சொட்டைத் தலையில் ஆரோக்கியமான தலை முடி வளர அற்புதமான எண்ணெய் இதுதான்!

First Published Sep 17, 2022, 1:44 AM IST

மன அழுத்தம் அதிகமுள்ள இன்றைய நவீன வாழ்க்கை முறையால், நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் ஒன்று தான், இளநரை மற்றும் இள வயதிலேயே முடி உதிர்வது. இவை, நம் முக அழகை கெடுக்கும் விதமாக அமைவதால், பல இளைஞர்கள் இதற்கான தீர்வைத் தேடி அலைகின்றனர். இதனைத் தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் உள்ளிட்ட சிகிச்சைகளை பல லட்சக்கணக்கு செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனாலும், இது முழுமையாக சரியாகவில்லை. இதற்கு நம் ஆயுர்வேத முறையில் செலவே இல்லாமல் சிகிச்சை உள்ளது. இது பற்றி இங்கு விரிவாக காண்போம்.

கருப்பு மிளகு எண்ணெய்

பொதுவாக சமையலறையில் கருப்பு மிளகு இல்லாமல் இருக்காது. இந்த கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களில் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.

நம் உச்சந்தலையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால், முடி வேர் வலுவிழந்து விழத் தொடங்கும். இத்தகைய சூழலில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதால், உங்கள் தலைமுடியை வலுவாக மாற்ற முடியும். சொட்டைத் தலையில் இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிகச் சிறந்த காலை உணவு நீராகாரம்: ஏன் தெரியுமா?

கருப்பு மிளகு எண்ணெயானது, பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதில் அடங்கியுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இந்த பண்பு பொடுகை முற்றிலும் சுத்தப்படுத்தி, பரவாமலும் தடுக்கிறது. ஆகையால், கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு மிகச் சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

முகப்பொலிவிற்கு இந்த ஒரு விதை போதும்: ஆச்சரியம் அளிக்கும் பயன்கள்!

உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கும் கருப்பு மிளகு எண்ணெய்  மிக நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக குறைக்கவும் உதவுகிறது.

Moon Milk : இரவில் தூக்கம் வரவில்லையா? ஆழ்ந்த உறக்கம் வர வைக்கும் "MOON MILK''!

click me!