இந்த மோசமான வாழ்க்கைப் பழக்கங்கள் மாரடைப்பை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

First Published | Nov 29, 2023, 7:40 AM IST

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்..

மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதால், பலரும் தங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமெனில், உங்களிடம் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவது தான் முதல் படி.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க, உங்கள் இதயத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்..

Tap to resize

Image: Getty

உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்

மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதற்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஒரு காரணம். ஏனென்றால், இது தமனிகளைத் தடுக்கிறது, இதனால் இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது உணவில் கவனம் செலுத்துவது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

அதிகப்படியான புகைபிடித்தல்

தினமும் அதிகமாக புகைபிடிப்பது இதய ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பழக்கம் தமனிகளை அடைப்பதன் மூலம் தமனிகளுக்குள் இரத்தக் கட்டிகளை உருவாக்க வழிவகுக்கும், இது மேலும் திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும். புகையிலையை எந்த வடிவத்திலும் உட்கொள்வது ஆபத்தானது, ஏனெனில் அதில் உள்ள நிகோடின் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது, இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

மது நுகர்வு

மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்துவது மட்டுமின்றி இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான மது அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. கூடுதலாக, இது கார்டியோமயோபதி, பக்கவாதம், புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, தொடர்ந்து மது அருந்துவதைத் தவிர்க்கவும், முடிந்தால், மதுபானம் அருந்துவதை படிப்படியாக குறைத்து பின்னர் அந்த பழக்கத்தை  நிறுத்தவும்.

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருகின்றன. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, மன அழுத்தம், பதட்டம் அல்லது மனச்சோர்வு உள்ளவர்கள் இதய பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் அவர்கள் அதிக ஆல்கஹால் அல்லது சிகரெட்டை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள், இது இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான இதயம் வேண்டுமானால் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது.

Latest Videos

click me!