அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் பல வகையான சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி, பி6, தியாமின், தாமிரம், இரும்பு, பொட்டாசியம், ஃபோலேட், ரிபோஃப்ளேவின் மற்றும் ப்ரோமைலைன் உள்ளது. குளிர் காலத்தில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.