கொலஸ்ட்ரால் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

First Published Jan 21, 2023, 12:30 PM IST

கட்டுப்பாடற்ற கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானது.  இதனால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. 

கொலஸ்ட்ரால் என்பது இன்று பலரைத் துன்புறுத்தும் பிரச்சனை. ஒருவரின் வயது, பாலினம் மற்றும் எடையைப் பொறுத்து கொலஸ்ட்ரால் அளவு மாறுபடும். 30 வயதிற்குப் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் கொலஸ்ட்ராலைப் பரிசோதிப்பது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கட்டுப்பாடற்ற கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவில் சுமார் 94 மில்லியன் மக்கள் அதிக கொலஸ்ட்ரால் கொண்டுள்ளனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும். இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரண்டாவது கெட்ட கொலஸ்ட்ரால். இதில் எல்டிஎல் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் அதிக கொழுப்பு படிந்தால் பிளேக்ஸ் எனப்படும் கொழுப்பு படிவுகள் உருவாகலாம். மறுபுறம், அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 

உங்கள் வாழ்க்கை முறை, பொது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்து வயதுக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு மாறுகிறது. அதிக கொலஸ்ட்ரால் பரம்பரையாக வரலாம். ஆனால் பெரும்பாலும் இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் விளைவாகும். உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் மற்றும் அதிக எடை மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் காரணமாக பலருக்கும் கொலஸ்ட்ரால் இருப்பு உடலில் அதிகரிக்கிறது.

தமனிகளுக்கு இரத்த ஓட்டம் ஏறக்குறைய தடைபடும் அளவுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக தகடுகளை உருவாக்கும்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடும்ப வரலாறு அல்லது வேறு ஏதேனும் இருதய நோய்களைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதிக கொலஸ்ட்ரால் எப்போதும் கட்டுப்படுத்த முடியும். கொலஸ்ட்ரால் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அதை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். 

click me!