அந்தரங்க உறுப்பை சுற்றி இப்படி இருக்குதா? உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்கலாம்

First Published Jan 20, 2023, 10:31 AM IST

பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் (STDs) அசாதாரண அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

பிறப்புறுப்பு பகுதிகளில் வரும் புண்கள் அல்லது மருக்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இது பாலியல் ரீதியான செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கலாம். ஆனாலும் அந்த அறிகுறி பாலியல் ரீதியாக பரவும் நோயாக (STD) ஆக இருந்தால், சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது ஆபத்தானது. இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் புண்கள் தீவிரமாகும். பாலியல்ரீதியான நோய்களின் நம்ப முடியாத அறிகுறிகள் குறித்து இங்கு காணலாம். 

பிறப்புறுப்பில் அரிப்பு

அந்தரங்க உறுப்பில் காணப்படும் புண்கள், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று அறிகுறியாக இருக்கலாம். பிறப்புறுப்பு மருக்களிலும் அவை காணப்படுகின்றன. இதனால் அரிப்பு, சில நேரங்களில் குதப் பகுதியில் இரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. பிறப்புறுப்பு ஹெர்பெஸ், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று, பிறப்புறுப்பில் மருக்கள், ஹெபடைடிஸ், கோனோரியா ஆகிய பாலியல்ரீதியாக பரவும் தொற்றுநோய் (STI) களில் குத அரிப்பு முக்கிய அறிகுறியாக உள்ளது. 

அசாரண ரத்தப்போக்கு! 

பாலியல்ரீதியாக பரவும் நோயாக இருந்தால் ஆசனவாயில் இருந்து ரத்தம் அசாதாரணமாக வெளியேறும். ஒருவேளை அது எஸ்.டி.டி (STD) ஆக இல்லாமல் இருந்தால் வேறு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். எவ்வித காரணமும் இல்லாமல் பிறப்புறுப்புப் பகுதிகளில் ரத்தம் வெளியேறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த அறிகுறிகள் டிரிகோமோனியாசிஸ் என்ற நோயாக இருக்கலாம். பாலியல் தொற்று நோய்களில் இது பொதுவான அறிகுறி ஆகும். 

சிறுநீர் கழிக்கும் போது வலி! 

தினமும் சிறுநீர் கழிக்கும் போது இயல்பாக இல்லாமல் வலி, அதிக முறை சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் அது எஸ்.டி.டி (STD) ஆக இருக்கலாம். இதனை சாதாரண விஷயமாக மக்கள் பார்க்கின்றனர் ஆனால் வலியுடன் சிறுநீர் கழிப்பது குடல் பிரச்சனை நீரிழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. 

பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, சிவந்து போதல்! 

பிறப்புறுப்பில் திரவம் வெளியேற்றம் அதனுடன் அரிப்பும் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். உடலில் பாலியல் ரீதியான தொற்று ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பினால் அங்கு வலி கொடுக்கும் தடிப்புகள் ஏற்படும். சிவந்தும் காணப்படும். இதற்கு முறையான பராமரிப்பு இல்லை என்பதே காரணமாகும். பாலியல் தொற்றுநோய்கள் பிறப்புறுப்பை சுற்றி வலிக்கும் தடிப்புகளை உண்டாக்கும். ஹெர்பெஸ், கோனோரியா, கிளமிடியா, சிபிலிஸ் ஆகிய நோய்களில் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. 

துர்நாற்றம்

அந்தரங்க உறுப்பில் இருந்து மோசமான நாற்றம் வருவது தொற்றுக்கான அறிகுறியாகும். கடுமையான பாதிப்பு ஏற்படும்போது இது மாதிரியான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது டிரிகோமோனியாசிஸின் அறிகுறியாகும். ஆண்களின் பிறப்புறுப்பு, பெண்களின் யோனியில் அடர்த்தியான இரத்தம் கலந்து வெள்ளை திரவ வெளியேற்றம் கோனோரியாவைக் குறிக்கிறது. 

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். இது மாதிரியான அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். 

click me!