அதிகமாக கொட்டாவி விடுவது ஆபத்து.. உடல் பேசும் மொழியை கேளுங்கள்

First Published Jan 19, 2023, 6:10 PM IST

அடிக்கடி கொட்டாவி விடுவது உடலில் உள்ள கெட்ட மாற்றங்களை நமக்கு காட்டும் அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நமக்கு கொட்டாவி வருவது இயற்கையான நிகழ்வு தான். கொட்டாவி என்பது தன்னிச்சையாக வாயைத் திறந்து, ஆழ்ந்த மூச்சை இழுத்து, நுரையீரலில் காற்றை நிரப்பும் செயலாகும். இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. எப்போதாவது வந்தால் கவலையில்லை, அடிக்கடி வந்தால் சந்தேகிக்கப்பட வேண்டும். தூக்கமின்மை, அதிக சோர்வால் கொட்டாவி வரலாம். யாரும் நாள் முழுக்க கொட்டாவி விடுவதில்லை. ஒருவேளை அடிக்கடி கொட்டாவி வந்தால் அதற்கு வலுவான காரணம் உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அடிக்கடி கொட்டாவி வர காரணம் 

அடிக்கடி கொட்டாவி வருவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆயினும் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சில மருத்துவ பிரச்சனைகளால் ஏற்படுகிறது. தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், பதற்றம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், நீரிழப்பு, உடல் வலிகள், சுவாச பிரச்சனைகள் ஆகியவை கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். 

அதிகமான கொட்டாவி சிகிச்சை

ஏதேனும் மருந்து உண்பதால் உங்களுக்கு அதிக கொட்டாவி ஏற்பட்டால், அதை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு தொடர்ந்து 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள். வார இறுதி நாட்களில் அதிக தூக்கத்தை தவிர்க்கவும். இது உங்களுடைய தூக்க சுழற்சியை பெரிதும் பாதிக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் இயக்கம் பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதை பின்பற்றுங்கள். காபின், மது அருந்துவதை விட்டுவிடுங்கள். செல்போன், லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களை தூரமாக வைத்துவிட்டு உறங்குங்கள். 

Doctor

ஏதேனும் நோய் அறிகுறியா? 

உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தால் வலிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு ஆகிய தீவிர மருத்துவ பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம். கொட்டாவி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி உடனே பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான கொட்டாவி எரிச்சலை தந்தாலும், உடல் உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே கொட்டாவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இதையும் படிங்க: கருத்தரிப்பதில் சிக்கல்.. இந்த பிரச்சனை இல்லைன்னா சீக்கிரம் அப்பா அம்மா ஆகிடலாம்!

click me!