உடல் எடையை குறைக்க பலரும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிப்பார்கள். இதில் பலன் நன்மைகள் இருந்தாலும் சில ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
எலுமிச்சை தண்ணீர் அல்லது லெமன் டீ இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. உடல் எடை குறைக்க வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கிறார்கள். சில லெமன் டீ குடிக்கிறார்கள். ஆனால் வெறுமனே இதுமட்டுமே எடையை குறைப்பதில்லை. சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சிதான் உடல் எடையை குறைக்கும்.
26
Side Effects of Lemon Water
எலுமிச்சையில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் வைட்டமி சியும் இதில் உள்ளது. ஆனால் எலுமிச்சை தண்ணீர் சிலருக்கு ஆபத்தானது. சிலர் இதைக் குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
36
Lemon Water for Weight Loss
பல்வலி பிரச்சனை இருந்தால் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவே கூடாது. இது பல் எனாமலை சேதப்படுத்தி பற்கூச்சம் வரவைக்கும். பல் வலி ஏற்கனவே இருந்தால் எலுமிச்சை தண்ணீர் குடித்த பின், வலியும், கூச்சமும் அதிகமாகும்.
புளிப்பு உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் எலுமிச்சை தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால் வயிற்றில் பிரச்சனைகள் வரலாம். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகும். வயிற்று வலி, தலைவலி இருந்தால் எலுமிச்சை தண்ணீர் குடிக்க வேண்டாம். தலைவலி மோசமாகும்.
56
Lemon Water
எலுமிச்சை தண்ணீர் சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதை டீயாக குடித்தால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுமள் ஏற்படும். பல் பிரச்சனைகள் வரும். குறிப்பாக எலும்பு ஆரோக்கியத்தை நேரடியாகவே பாதிக்கும் அபாயம் உள்ளது.
66
Lemon Water
ஏற்கனவே நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு மருந்து உண்பவர்கள் எலுமிச்சையை தேநீராக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் பல உடல்நலப் பிரச்சினைகள் வரலாம்.