காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உண்டா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!!

First Published | Apr 29, 2023, 12:06 PM IST

நம்மில் பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இவ்வாறு  டீ குடிப்பதன் மூலம் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

சிலர் காலையில் எழுந்ததும் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்பார்கள். இப்படி குடித்தால் நம் உடலுக்கு அமிலத்தன்மை, செரிமான பிரச்சனைகள் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 
 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பெட் காபி அல்லது டீ குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. ஏனெனில் அதில் காஃபின் என்ற மூலக்கூறு உள்ளது. இது உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களைத் தூண்டும் மற்றும் செரிமானத்தை அழிக்கக்கூடிய தன்மை இதில் உள்ளது.

இதையும் படிங்க: டீயுடன் பரோட்டா சாப்பிடும் நபரா நீங்கள்? அப்போ நீங்க தான் இதை கண்டிப்பா படிக்கணும்..!!!

Latest Videos


வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

பற்கள் அரிப்பு:
காலை எழுந்ததும் டீ குடிப்பது உங்கள் பற்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் அவை உங்கள் பற்களின் பற்சிப்பியை செய்யை அரிக்கக்கூடும்.  மேலும் சர்க்கரையில் பாக்டீரியாக்கள் உள்ளதால் அவை வாயில் அமில அளவை அதிகரிக்க வழிவகிக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு பற்கள் அரிப்பு ஏற்படலாம்.

நீரிழப்பு ஏற்படுத்தும்:

இயற்கையில் டீ டையூரிடிக் தன்மை கொண்டது. இது உங்கள் உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகிறது. நீங்கள் இரவில் தூங்குவதால் இயற்கையாகவே உங்கள் உடல் தண்ணீர் இல்லாமல் நீரிழிந்து போகிறது. இந்நிலையில் காலை எழுந்தவுடன் டீ குடிப்பதால் அது அதிகப்படியான நீர் இழப்பை ஏற்படுத்துவதோடு தசைப் பிடிப்புக்கு வழிவகுக்கும்.

குமட்டல் உண்டாக்கும்:

நீங்கள் இரவு முழுவதும் தூங்குவதால் உங்கள் வயிறு காலியாக இருக்கும். அந்நேரத்தில் தூங்கி எழுந்தவுடன் டீ குடிப்பது உங்கள் வயிற்றில் பித்த சாறின் நடவடிக்கை பாதிக்கும். இதன் காரணமாக உங்களுக்கு குமட்டல் மற்றும் பதட்டம் உண்டாகும்.

இரும்பு சத்தும் உறிஞ்சும் :

தேயிலையில் இயற்கையாகவே இரும்பு உறிஞ்சும் தன்மை உள்ளது. எனவே வெறும் வயிற்றில் டீ குடித்தால் அது உங்கள் உடலில் உள்ள இரும்பு சத்துக்களை உறிஞ்சிவிசுடும். குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்கள் டீ குடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

click me!