1 மாசத்துல '5' கிலோ எடை குறைய! இந்த 6 விஷயங்கள் பண்ணா போதும்!!
நீங்கள் ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க விரும்பினால் தினமும் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க விரும்பினால் தினமும் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Healthy Habits to Lose 5 Kilos in a Month : உடல் எடை அதிகரிப்பால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கங்கள் தான். உடல் எடையை குறைக்க நம்பில் பலர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல விஷயங்களை செய்கின்றோம். ஆனால் அவை ஏதும் இல்லாமல் தினமும் சில பழக்கங்களை மட்டும் பின்பற்றி வந்தால் போதும். எடையை சுலபமாக குறைத்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஆம், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆறு விஷயங்களை மட்டும் நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் போதும் உங்களது எடையை கஷ்டம் இல்லாமல் மிக எளிதாக குறைக்க முடியும். அது என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. குளிர்ந்த நீர் குளியல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றம் மற்றும் எடை இழுப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தயிர், கிமிச்சி போன்ற புளித்த உணவுகள் நல்ல செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது வீக்கத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்து, பசியை குறைக்கவும் உதவுகின்றது.
தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதற்கு பதிலாக உடலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுப்பதன் மூலம் கொழுப்பை எரிக்க முடியும். எனவே ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது சாப்பிடாமல் இருந்தால் உடலில் இன்சுலின் அளவை குறைத்து கொழுப்பு குறைக்க ஊக்குவிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும்.
உங்களுக்கு வேகமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. வேகமாக சாப்பிட்டால் உடலில் தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். எனவே உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இது சிறந்த செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது மற்றும் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கிறது.
இதையும் படிங்க: தூங்கும் முன் 'இதை' குடித்தால் போதும்.. எடை தன்னால குறையும்
நீங்கள் மூன்று வேளையும் உணவு சாப்பிடுவதற்கு பதிலாக, ஒருவேளையாவது கண்டிப்பாக சூப் அல்லது ஸ்மூர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது.
இதையும் படிங்க: எடை குறைய டீ!! தினமும் இரண்டு வேளை குடிச்சு பாருங்க!
அதிகமான அழுத்தம் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். முக்கியமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதற்கும் தூண்டும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் தியானம் செய்யுங்கள் அல்லது இயற்கையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக மன அழுத்தம் இல்லாமல் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.