3. தூக்கக் கோளாறுகள்:
பெண்களுக்கு அதிக அளவில் தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாதவிடைவுக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவில் தூக்கக் கோளாறுகள் அதிகரிக்கின்றன.
தூக்கக் கோளாறை ஏற்படுத்தும் அமைதியற்ற கால்கள் நோய் (RLS - Restless Leg Syndrome), Sleep Apnea போன்ற நோய்கள் ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவில் ஏற்படுகின்றன. அமைதியற்ற கால்கள் நோய் (RLS - Restless Leg Syndrome) என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். கால்களில் இறுக்கம், முணுமுணுப்பு, நகர்வது போன்று உணர்வது இதன் அறிகுறிகளாகும். இது அதிகமாக இரவு நேரங்களில் அல்லது ஓய்வாக இருப்போது அதிகரிக்கிறது. கால்களை அசைக்கும் வரை இக்குழப்ப உணர்வு நீடிக்கும்.
Sleep Apnea என்பது தூக்கத்தில் சுவாசம் தடைபடும் நோயாகும். இது ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக ஏற்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை என தூக்கவியல் நிபுணர் மிச்செல்லே டெர்ரப் கூறுகிறார்.