பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று... ஒரே நாளில் நீங்க! இந்த 7 விதமான வீட்டு வைத்தியம் உதவும்!

First Published | May 8, 2023, 9:58 AM IST

அனைத்து பெண்களுக்கும் அவர்களுடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தொற்றை வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்யும் வழிகளை இங்கு காணலாம். 

அந்தரங்க பகுதி மிகவும் மென்மையானது. உணர்திறன் மிக்கது. பொதுவாக அதிக வெப்பம், ஒவ்வாமை, காற்றோட்டம் இல்லாதது போன்ற பல காரணங்களுக்காக அங்கு தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று நீங்க வீட்டு வைத்திய முறைகளை இங்கு காணலாம். 

​எப்சம் உப்பு 

எப்சம் உப்பு தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று, சருமத்தில் உண்டாகும் எரிச்சல் ஆகியவற்றை நீக்கும் அற்புத பொருள். குளியல் நீரில் (வெந்நீர்) எப்சம் உப்பை கலந்து குளிக்கலாம். இது தவிர, மிதமான சூட்டில் இருக்கும் நீரில் எப்சம் உப்பை போட்டு பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும். 

Tap to resize

பெப்பர்மிண்ட் எண்ணெய்

பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட பெப்பெர்மிண்ட் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் ஈஸ்ட் தொற்றை கட்டுப்படுத்தலாம். பெப்பர்மிண்ட் ஆயிலை தொற்று பாதித்த இடத்தில் அப்படியே தடவக்கூடாது. இதனால் வலியும் எரிச்சலும் ஏற்படும். இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது விரைவில் ஈஸ்ட் தொற்று குணமாகும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் கலந்தும் பயன்படுத்தலாம்.

கிரீன் டீ 

ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் காணப்படும் கிரீன் டீயில், சரும தொற்றுகளை சரி செய்யும் பண்புகள் உள்ளன. கிரீன் டீ பேக்களை ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து உறைய விடுங்கள். பின்னர் அதைக் கொண்டு பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறைந்து, அங்கு தொற்று பாதிப்பும் குறையும். 

கற்றாழை ஜெல் 

ஈஸ்ட் தொற்றை சரி செய்யும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கற்றாழையில் காணப்படுகின்றன. தொற்று பாதித்த பிறப்புறுப்பு பகுதியில் கற்றாழை ஜெல்லை பூசுவதன் மூலம் எரிச்சலும் வலியும் குறையும். கற்றாழை சாறு அருந்துவதன் மூலமும் தொற்றை குறைக்கலாம். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருங்கள்..

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது. வீக்கம் அடைந்த அல்லது எரிச்சல் கொண்ட சருமத்தில் தேங்காய் எண்ணெயை பூசும்போது இதமாக இருக்கும். அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்று ஏற்படும் போது தேங்காய் எண்ணெய் அதற்கு நல்ல தீர்வு தரும். இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த பொருளும் கலக்காமல் அப்படியே தேங்காய் எண்ணெயை தடவலாம். ஒரே நாளில் அல்லது பாதிப்பை பொறுத்து 2 அல்லது 3 முறை தேங்காய் எண்ணெய் தடவினால் ஈஸ்ட் தொற்று விரைவில் குணமாகும். 

Latest Videos

click me!