குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்ற வயது என்ன?

First Published | May 7, 2023, 1:28 PM IST

எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது குழந்தை வளர்ப்புக்கு சரியான காலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

குழந்தை பெற்று கொள்வது ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலை இருக்கும். ஆனால் குழந்தை பெற திட்டமிடுபவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார அளவில் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். வயதும் அதில் ஒரு காரணியாக உள்ளது. 

20 வயதுக்கு முன் : 

பதின்ம பருவத்தில் குழந்தை பெறுவது நல்ல விஷயம் அல்ல. உடல் வலுவாக இருந்தாலும் கூட மனரீதியாக தயாராக இருப்பீர்களா என்பது சந்தேகம் தான். குழந்தை வளர்ப்புக்கான பக்குவமும் தேவை. பொருளாதார ரீதியான விஷயங்களும் வலுவாக இருக்க வேண்டும். 

Latest Videos


20 முதல் 24 வயது: 

பெண்கள் 20 வயது முதல் 24 வயதிற்குள் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். உடலும் மனதும் ஒரு நிலைக்கு வந்துவிடும். பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொண்டால் நல்லது. குழந்தையை பெற்று வளர்ப்பதற்கான நல்ல சூழல் அமையும். 

25 முதல் 27 வயது : 

பெண்கள் 20 வயதில் குழந்தை பெறுவதற்கும் 27 வயதில் குழந்தை பெறுவதற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. குழந்தைபேறுக்கான வாய்ப்புகளில் மாற்றம் இருக்காது. ஆனாலும், மனப்பக்குவம், பொருளாதார நிலை போன்றவை வலுவாக இருக்கும். இந்த 27 வயது குழந்தை பெற்று கொள்ள நல்ல வயது தான். சரியான முடிவாக இருக்கும். 

30 முதல் 34 : 

நீங்கள் 30 வயதை நெருங்கிய உடன் அல்லது 35 வயதுக்கு பின்னர் குழந்தை பேறு வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் நல்ல வாழ்க்கை துணை, பொருளாதாரம், உடல் வலு இருந்தால் முன்கூட்டியே பெறுவது நலம். இளமைப் பருவத்தை கொண்டாடி தீர்த்துவிட்டு இந்த வயதில் குழந்தை பெற்று கொள்ளலாம். 

இதையும் படிங்க்: பைல்ஸ் பிரச்சனைக்கு 'குட் பை' சொல்ல வாழைப்பழத்தை எப்போது சாப்பிடணும் தெரியுமா?

35 முதல் 39 : 

சுமார் 32 வயதிற்கு பிறகு குழந்தை பேறுக்கான வாய்ப்பு படிப்படியாக குறையும். இது 37 வயதிற்கு பிறகு இன்னும் மோசமடைகிறது. இந்த வயதில் குழந்தை பெற முயலும்போது பெண்கள் உயர் ரத்த அழுத்தம், கர்ப்ப கால நீரிழிவு நோய் போன்ற நோய்களில் அவதிபடுகிறார்கள். இதனால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுகிறது. 

40 முதல் 45 வயது: 

பெண்கள் 40 வயதிற்கு பிறகு குழந்தை பெற முயலும்போது சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த குழந்தைபேறு வாய்ப்புகள் 5% -க்கும் குறையவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 40 வயதிற்கு பிறகு கர்ப்பம் ஆகும்போது உடல்நிலை காரணமாக சிலருக்கு கரு கலையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ரத்த உற்பத்தியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

click me!