குட்டிஸ்கள் எதனால் விரல் சூப்புகிறார்கள் ? அதன் பின்னணி தெரியுமா? வாங்க பார்க்கலாம்!

First Published | Apr 27, 2023, 7:41 PM IST

விரல் சூப்பும் பழக்கம் தாய்ப்பால் குடித்து வளரும் குட்டிஸ்களை விடப் புட்டிப்பால் குடித்து வளரும் குட்டிஸ்களிடம் தான் அதிகமாக இருக்கிறது.அதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம் வாங்க !

எதனால் குழந்தைகள் கை சூப்புகிறார்கள்:

குழந்தைகள் மழலை பருவத்தில் செய்கின்ற ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசனை மிகுந்ததாக தான் இருக்கும்.அந்த வகையில் சிறுக் குழந்தைகள் பலரும் கை சூப்புவதை நாம் பார்த்து இருப்போம். கை சூப்புவதை பெற்றோர்கள் அனுமதிக்க மறுத்தாலும் அது பார்ப்பதற்கு அழகு தான்.

நம் வீட்டு குட்டிஸ்களுக்கு இப்படியான கை சூப்பும் பழக்கத்தை எவரும் கற்றுக் கொடுப்பதில்லை . எனினும் இந்த பழக்கம் எப்படி அவர்களுக்கு வருகிறது? வாருங்கள் பார்க்கலாம்.

தாயின் கருப்பையில் வளரும் போதே, குழந்தை விரல் சூப்ப ஆரம்பித்து விடுமாம். தாயின் கருப்பையில் பழகிய அந்த பழக்கத்தை, வெளியில் வந்த பிறகும் தனிமையை உணரும் நேரத்தில் மீண்டும் அதனை செய்ய தொடங்குகிறார்கள்

அதிலும் விரல் சூப்பும் பழக்கம் தாய்ப்பால் குடித்து வளரும் குட்டிஸ்களை விடப் புட்டிப்பால் குடித்து வளரும் குட்டிஸ்களிடம் தான் அதிகமாக இருக்கிறது.அதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம் வாங்க !

இதன் முக்கிய காரணம் யாதெனில் குழந்தை ஆசைப்படும் வரை ஒரு தாய் ஆசை தீரும் வரை தன குழந்தைக்கு தன்னிடம் பால் குடிக்க அனுமதிர்ப்பாள். குழந்தை இப்படி தாய்ப்பால் குடித்து ஆசை தீர்த்துக் கொள்வதாலும், வயிறு முழுதும் நிரம்புவதாலும் அப்படியே சுவையில் லயித்து உறங்கி விடுவார்கள். ஆகையால் விரல் சூப்பும் எண்ணம் வருவதில்லை.

இதே புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் புட்டியில் பால் காலியான பிறகு, அந்த புட்டியை எடுத்து விடுவார்கள். ஆனால் குட்டிஸ்களுக்கு சுவைக்கும் ஆசை அடங்குவதில்லை வயிறும் நிரம்பாதாம். இதனால் பால் குடிக்கும் ஆசை நிறைவேறாத காரணத்தினால் குழந்தை விரல் சூப்பத் தொடங்குமாம்.

எந்த ஒரு குழந்தைக்கு தூக்கத்தின் போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்க வில்லையோ அவர்கள் விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். சரியாகத் தூக்கம் வராத போது, வற்புறுத்தி தூங்க செய்வது, அசதியாக இருக்கிற போது, குழந்தைக்கு விளையாட்டு காட்ட யாரும் இல்லாத போது என்று இப்படி பல்வேறு காரணங்களினால் இந்த ஒரு பழக்கத்தை விறுவிறுவென கற்றுக் கொள்கிறது.

மேலும் பல குழந்தைகள் இதனை ஒரு பாதுகாப்பு கவசமாகவும், ஒரு பெரிய துணை இருப்பதாகவும் உணர்ந்து இதனை அப்படியே தொடர்வார்கள். குழந்தை வளரும் நேரத்தில் பெற்றவர்களின் பாசத்தைக் எதிர்பார்க்கிறது.மேலும் பேச்சுத் துணையை நாடுகிறது. பிறருடன் விளையாட ஏங்குகிறது. அனைவரும் அவர்களை கவனிக்க வேண்டும் என்று குழந்தைகள் எண்ணுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் நடக்காமல் இருக்கும் போது குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை அதிகப்படுத்துகிறார்கள்.

ஒரு சில குழந்தைகள் பல் முளைக்கத் ஆரம்பிக்கும் போது, ஈறுகளில் உந்துதல் காரணமாக விரல் சூப்பு செய்வார்கள். பல் முளைத்த பின் அந்த பழக்கத்தை ஒரு சில குழந்தைகள் மட்டுமே தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கத்தை தொடர்வார்கள்.

கை சூப்புவதில் 2 விதங்கள் உள்ளன.

Passive Thumb Sucker :

இந்தப் பழக்கம் கொண்டுள்ள குழந்தைகளை நிறுத்துவது சுலபம். இப்படிபட்ட பழக்கம் ஏற்படும் போதே வாயில் இருந்து மெதுவாக கையை எடுத்து விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து கண்காணித்து அப்பொழுதே கையை மெதுவாக எடுத்து வந்தால், குழந்தையின் கை சூப்பும் பழக்கம் பெரியவர்களின் முயற்சியால் விரைவில் நிறுத்தி விடலாம்.

Active thumb sucker

கொஞ்சம் பெரிய அதாவது 2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த விதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை இந்தப் பழக்கத்திலிருந்து மீழுவதற்கு அதிக அளவிலான முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.
.
ஒரு சிலர் 2 வயதை தாண்டிய பிறகும் கை சூப்புவதை பின் தொடர்ந்தால் அவர்களைக் முழுமையாக கவனித்தாக வேண்டும்.ஏனென்றால் இந்த கை சூப்பும் பழக்கம் இருந்தால் பற்கள் உருவாவதில் சிக்கல்கள் ஏற்படும்.

Tap to resize

தடுப்பது எப்படி:

இப்படியான குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்புவது அவசியமாகும். குழந்தை எதனை விரும்புகிறதோ அல்லது ஆர்வமாக இருக்கிறதோ அதனை கொடுத்து, இந்த பழக்கத்தில் இருந்து விடுபட செய்யலாம்.

குழந்தை எதை செய்ய நினைக்கிறதோ அதனை செய்ய அனுமதித்து அவர்களின் ஏக்கத்தைப் வெளியேற்ற போக்கி மகிழ்ச்சியான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாட செய்ய வேண்டும்.

சற்று வளர்ந்த குழந்தையாக இருப்பின் ஏதேனும் எழுதுவோ, கிறுக்கவோ /வரையவோ என்கரேஜ் செய்யலாம். குழந்தைகளைத் தனியாக விடாமல் அவர்கள் கூட சேர்ந்து விளையாட வேண்டும்

கண்களுக்கும், கைகளுக்கும் நடுவில் தொடர்பு உள்ளவாறு இருக்கும் விளையாட்டுகளை விளையாட செய்ய வேண்டும். குறிப்பாக விரல்கள் எப்போதும் ஏதோ ஒரு வேலை செய்யும் படி செய்ய வேண்டும். குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த சொல்லி மிரட்டுவதோ, அடிப்பதோ கூடாது.

அது பெரியவர்களின் மீது வெறுப்பை வளர்க்கும். குழந்தையிடம் கண்டிப்பாக பேசுவதை விட அவர்களின் சிறிய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் அன்பான அணுகு முறையின் மூலம் இந்தப் பழக்கத்தை விரைவில் மாற்றலாம்.

வழக்கமாகத் உறங்க வைக்கும் நேரத்தில் தான் குழந்தைகள் அதிகமாக விரல் சூப்புவார்கள். அப்போது அவர்களின் கைபிடித்து அல்லது கையில் புத்தகம் அல்லது ஏதோ விளையாட்டு பொருளை கொடுத்து கதை கூறியபடியே , அரவணைத்து தூங்க வைப்பது போன்றவைகளை வழக்கமாக செய்தால் குழந்தைகள் மெல்ல மெல்ல இந்தப் பழக்கத்தில் இருந்து மீளுவார்கள்.

கோடையில் உடல் சூட்டை தணிக்க சிறந்தது மோரா ? தயிரா? எதுவென்று தெரியுமா?

Latest Videos

click me!