ஜொள்ளு வடிவதோடு சேர்த்து சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தின் நடுவே மூச்சுத் திணறல் ஏற்படுவது, அடிக்கடி முழிப்பு வருவது அல்லது காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இவை 'ஸ்லீப் அப்னியா'எனப்படும் தூக்கம் தொடர்பான சுவாசப் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த நிலையில், தூங்கும்போது சுவாசம் அடிக்கடி நிற்கலாம் அல்லது குறையலாம். இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
இரவில் ஜொள்ளு வடிவதை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
மூக்கின் ஆரோக்கியம்: அலர்ஜி அல்லது மூக்கு அடைப்பு பிரச்சனை இருந்தால் சரியான மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
தூங்கும் பொசிஷன்: ஒருக்களித்து படுக்கும்போது ஜொள்ளு அதிகமாக வடிந்தால், உங்களுக்கு வசதியான தூங்கும் பொசிஷன் பற்றி மருத்துவரிடம் கேட்கலாம்.
வாய் சுத்தம்: தினமும் இரண்டு முறை பல் துலக்குவது மற்றும் பல், ஈறு பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை பெறுவது முக்கியம்.
தூக்கத்தின் தரம்: தினமும் சரியான நேரத்திற்கு தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அறிகுறிகளை கவனியுங்கள்: ஜொள்ளு வடியும் பிரச்சனை தொடர்ந்து இருந்தாலோ அல்லது விழுங்குவதில் சிரமம், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள்.