Pomegranate for Heart Health : தினமும் மாதுளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை சமீபத்திய பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மாதுளம் பழம் அல்லது அதன் சாற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்வது சிஸ்டாலிக் (Systolic) இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதயத் தமனிகளில் ஏற்படும் வீக்கமே (Inflammation) மாரடைப்பிற்கு முக்கிய காரணமாகிறது. மாதுளையில் உள்ள பாலிஃபீனால்கள் (Polyphenols) இந்த வீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன. மாதுளை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உடலில் இரத்த ஓட்டம் சீரடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
25
புனிகலஜின் ஆன்டிஆக்ஸிடன்ட்
மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க ஒரு சிறந்த தேர்வாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அஸ்கார்பிக் அமிலம், மற்ற உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மாதுளம் பழம் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம் மாதுளை சாப்பிடும்போது, அதில் உள்ள புனிகலஜின் (Punicalagin - PC) என்ற சத்து, யூரோலித்தின்ஸாக (Urolithins) உடைகிறது. இது உடலுக்கு மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கிறது. புனிகலஜின் மற்றும் ஆந்தோசயனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளை, நமது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.
35
தமனிகளை சுத்தம் செய்யும் மாதுளை
மாதுளை ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், அதிகப்படியான வைட்டமின் சி, நான்-ஹீம் இரும்புச்சத்தை (non-heme iron) உடல் எளிதில் உறிஞ்சும் வடிவத்திற்கு மாற்றுகிறது. இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு துணைபுரிகிறது. மாதுளையில் உள்ள புனிகலஜின் என்ற சேர்மம், இதயம் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
காலப்போக்கில், தமனிகளின் சுவர்களில் கெட்ட கொழுப்பு படிந்து, ரத்த ஓட்டத்தை தடை செய்யும். மாதுளை இதைத் தடுக்க உதவுகிறது. மாதுளையில் உள்ள சேர்மங்கள் தமனிகளை சுத்தம் செய்து, சீராக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. தமனிகளில் உள்ள கொழுப்புப் படிவுகள் (plaque) உடையும்போதுதான் பெரும்பாலான மாரடைப்புகள் ஏற்படுகின்றன.
யூரோலித்தின் ஏ (Urolithin A) என்ற சேர்மம், தமனிகளில் உள்ள கொழுப்புப் படிவுகளை தடிமனாக்கி, மேலும் நிலையானதாக மாற்றுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையில் உள்ள யூரோலித்தின் ஏ, ரத்தத்தில் உள்ள அழற்சி சைட்டோகைன்களின் (inflammatory cytokines) அளவைக் குறைத்து, நீண்டகால இதய நோயைத் தடுக்கிறது.
55
எப்படிச் சாப்பிட வேண்டும்?
தினமும் ஒரு நடுத்தர அளவிலான மாதுளம் பழம் அல்லது சுமார் 150 மிலி - 200 மிலி சர்க்கரை சேர்க்காத மாதுளைச் சாறு போதுமானது. மாதுளையைச் சாறாகக் குடிப்பதை விட, முத்துக்களாக மென்று சாப்பிடுவது நார்ச்சத்தையும் (Fiber) சேர்த்து வழங்கும். நீங்கள் ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்காகவோ அல்லது இரத்தம் மெலிதாவதற்கோ (Blood thinners) மருந்துகள் எடுத்துக்கொள்பவர் என்றால், மாதுளையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இது சில மருந்துகளுடன் வினைபுரிய வாய்ப்புள்ளது.