வீட்டுக்குள் தூய்மையான காற்று வேண்டுமா?.. சிறப்பாக வேலையை செய்யும் 4 செடிகள் - பராமரிப்பதும் சுலபம்!

First Published | Jul 22, 2023, 8:07 PM IST

புவி வெப்பமயமாகுதல் கூடிக் கொண்டே வரும் நேரத்தில் நாம் அனுதினம் சுவாசிக்கும் காற்றும் கொடிய நஞ்சாக மாறி வருகிறது என்று தான் கூறவேண்டும்.

ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் நாமே என்பதையும் நாம் அறிய வேண்டும். அதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறியது போலவும், அவருடைய சீடர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் கூறியதை போலவும் மரங்கள் பலவற்றை நட்டு அதன் மூலம் நாம் பயன்பெறுவோம். இந்த பதிவில் நம் வீட்டிற்குள் வருகின்ற காத்தை சுத்தம் செய்யக்கூடிய நான்கு முக்கியமான செடிகளை பற்றி காணலாம்.

பீஸ் லில்லி.. தற்பொழுது பல வீடுகளில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இந்த செடி என்று கூறினால் அது மிகையல்ல. கோடைகால துவக்கத்தில் வெள்ளை நிற பூக்களை துளிர்விடும் இந்த செடிகள் காற்றிலுள்ள நச்சுத்தன்மைகளை பெரிய அளவில் குறைக்க வல்லது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிதமான வெயில் படும் இடங்களில் இதை வைத்தாலே போதுமானது, ஆனால் இந்த செடியை தாங்கி நிற்கும் மண்ணை சற்று காய விடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

Postpartum Back Pain : பிரசவத்திற்கு பின் முதுகு வலி? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ..!!

ஸ்நேக் பிளான்ட்.. இவற்றை கிண்டலாக மாமியாரின் நாக்கு என்று அழைப்பார்கள், இதுவும் வீட்டிற்குள் வளர்க்கப்படக்கூடிய ஒரு செடி வகை தான். தனது இலைகளின் ஓரத்தில் மஞ்சள் அல்லது வெளிநிறங்களை கொண்டிருக்கும் இதுவும் நாம் வீட்டிற்குள் சுவாசிக்கும் காற்றில் நச்சுத்தன்மைகள் இருப்பின் அதை பெருமளவு குறைக்க உதவும்.
 

Latest Videos


கற்றாழை.. இது என்னென்ன விதத்தில் பயன்படும் என்பதை தமிழர்களாகிய நாம் நன்கு அறிவோம். ஆனால் இது காற்றை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பெரிய அளவில் பூச்சிகளுக்கோ அல்லது பிற ஒட்டுன்னிகளுக்கோ இது வளைந்து கொடுக்காது.பல மருத்துவ குணங்கள் உள்ள கற்றாழையில் காற்றை சுத்தப்படுத்தும் சக்தியும் உள்ளதாம்.

மணி பிளான்ட் ஏறக்குறைய இன்று அனைவரது வீட்டிலும் இந்த மணி பிளான்ட்டுகள் இருகின்றது. இவையும் காற்றை சுத்தப்படுத்த ஒரு சிறந்த செடிகளாக பார்க்கப்படுகிறது. இதை வளர்ப்பது என்பது மிக மிக சுலபமான ஒன்று.

எச்சரிக்கை : இந்த உண்மை மட்டும் தெரிஞ்சா...இனி உங்க குழந்தைகளுக்கு டீ காபி கொடுக்க மாட்டீங்க..!

click me!