வெயிலுக்கு தயிர் இதமா இருக்கும்.. ஆனா இந்த உணவுகளுடன்  சாப்பிடாதீங்க..!!

Published : Apr 16, 2025, 09:13 AM ISTUpdated : Apr 16, 2025, 09:19 AM IST

ஆரோக்கியத்திற்கு அமிர்தம் போன்றது. ஆனால் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாகி விடும். எந்தெந்த உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
16
வெயிலுக்கு தயிர் இதமா இருக்கும்.. ஆனா இந்த உணவுகளுடன்  சாப்பிடாதீங்க..!!

Foods To Avoid With Curd : தயிர் என்பது இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இது சுவையானது மற்றும் சத்தானது. தயிர் சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுவும் குறிப்பாக, கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை மேம்படுத்தும். ஆகினும் ஆயுர்வேதத்தின் படி, தயிருடன் சில உணவுப் பொருட்களை கலந்து சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இந்த தவறான உணவு சேர்க்கையானது உங்கள் உடலுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் தயிருடன் எந்தெந்த உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

26
Fish and Curd Combination

தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்:

மீன் - தயிர் மீனும் சேர்த்து சாப்பிடும் கலவையானது மிக மோசமானது. இவை இரண்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். மீனில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தயிர் குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே இரண்டு பண்புகளும் ஒன்றாக சேர்ந்தால் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மீன் மற்றும் தயிர் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் வயிற்று அசெளகரியம், நெஞ்செரிச்சல் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, இந்த இரண்டு கலவையானது உடலில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி சமநிலையை சீர்குளிக்கும். இதன் விளைவாக சரும வெடிப்பு, தடிப்புகள், அரிப்பு, சிவந்து போதல் ஏற்படும். எனவே மீன் சாப்பிட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிடுவது தான் நல்லது.

36
Mango and Curd Combination

மாம்பழம் - மாம்பழத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், சிலர் இதை தயிருடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இந்த இரண்டு கலவையும் ஒன்றாக சேரும்போது உடலில் நச்சுக்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றன. மாம்பழம் உடலில் சூட்டை ஏற்படுத்தும். தயிர் குளிர்ச்சியை அளிக்கும். உண்மையில், இந்த இரண்டு பண்புகளும் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனால் செரிமான அமைப்பில் பிரச்சனை, சருமத்தில் ஒவ்வாமை ஏற்படும். எனவே மாம்பழம் சாப்பிட்டு பிறகு சிறிது நேரம் கழித்துதான் தயிர் சாப்பிட வேண்டும். அதுதான் நல்லது.

இதையும் படிங்க:  தயிருடன் 'இதை' மட்டும் சேர்த்து சாப்பிடுங்க.. எப்படிப்பட்ட மலச்சிக்கலா இருந்தாலும் குணமாகிடும்!! 

46
Onion and Curd Combination

வெங்காயம் - வெங்காயம் மற்றும் தயிர் கலந்த பச்சடி கலவையை பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த கலவையானது உடலில் உள்ள வெப்பம் மற்றும் குளிர்ச்சி சமநிலையை சீர்குலைத்து விடும். அதாவது வெங்காயம், சூடான தன்மையை கொண்டது. தயிர் உடலை குளிர்ச்சியடையச் செய்யும். இவை இரண்டும் இயற்கைக்கு மாறானது என்பதால், உடலில் செரிமான பிரச்சினை, தோல் வெடிப்பு, சருமத்தில் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  தயிர் அல்லது மோர் : வெயிலுக்கு எது பெஸ்ட்!

  

56
MIlk and Curd Combination

பால் - தயிருடன் பால் சேரும் கலவையானது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தயிர் மற்றும் பால் இவை இரண்டும் பால் பொருட்களானாலும், அவற்றை ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். உண்மையில், பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். தயிர் மிக எளிதில் ஜீரணமாகிவிடும். இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது அமிலத்தன்மை, வயிற்றில் வாயு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும். இதுதவிர, சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதாவது முகப்பருக்கள் ஏற்படலாம். ஆயுர்வேதத்தில், தயிர் மற்றும் பால் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பால்குடித்த பின் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

66
Oil Foods and Curd Combination

எண்ணெய் உணவுகள் - பூரி, பரோட்டா போன்ற எண்ணெய் உணவுகளுடன் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல. இந்த கலவையானது செரிமானத்தை மெதுவாக்கும். தயிர் எளிதில் ஜீரணமாகிவிடும். எண்ணெய் உணவுகள் அப்படி அல்ல. இந்த இரண்டு கலவையும் உடலில் வீக்கம், சோம்பலை ஏற்படுத்தும். இது தவிர, முகப்பருவை ஏற்படுத்தும். எனவே, எண்ணெய் உணவுகளுக்கு பதிலாக லேசான உணவுகளுடன் தயிர் சாப்பிடுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories