இன்று உலகத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு வியாதி என்றால் அது டயபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் தான் . சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த ஒரு பேதமின்றி அனைவருக்கும் வரக்கூடிய வியாதி தான் இந்த சர்க்கரை நோய்.
இந்த சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், ஒரு சில இயற்கை வைத்தியத்தையும் பின்பற்றினால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது.
இயற்கை முறை என்று கூறும் போது பல விதமான மூலிகைகள் அதற்கு துணை புரிகின்றன. இப்படியான இயற்கையாக கிடைக்கும் பொருளை வைத்து இயற்கையான முறையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கை மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.