என்ன செஞ்சாலும் '1' கிராம் கூட எடை குறையலயா? இந்த '5' தவறுகளை பண்ணாதீங்க!! 

Published : Feb 04, 2025, 08:37 AM IST

Mistakes To Avoid In Weight Loss : உடல் எடை குறையாமல் இருக்க எந்தெந்த தவறுகள் காரணமாக இருக்கலாம் என இந்தப் பதிவில் காணலாம். 

PREV
15
என்ன செஞ்சாலும் '1' கிராம் கூட எடை குறையலயா? இந்த '5' தவறுகளை பண்ணாதீங்க!! 
என்ன செஞ்சாலும் '1' கிராம் கூட எடை குறையலயா? இந்த '5' தவறுகளை பண்ணாதீங்க!!

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகும். உடல் பருமன் தான் பாதி நோய்களுக்கு காரணமாக இருக்கும். அதனால் உடல் எடையை குறைக்க பலர் முயன்று வருகின்றனர். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டம் என எல்லாமே முயன்றாலும் எடை ஒரு கிராம் கூட குறையாது. அதற்கு என்ன காரணம் என பலருக்கும் தெரியாது. 'மாங்கு மாங்குனு வொர்க் அவுட், பண்றேன். டயட் இருக்கேன். ஆனா ஒரு பொட்டு கூட வெயிட் குறையலனு'புலம்புற ஆளா நீங்க? இந்தப் பதிவு உங்களுக்கு தான். இங்கு உடல் எடை குறைப்பில் செய்யும் தவறுகளை இங்கு காணலாம். 

25
எடை இழப்பை பாதிக்கும் காரணிகள்:

உணவுப் பழக்கம் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்செயல்பாடு 20% என்றால், உணவு பழக்கம் 80% எடை குறைப்பில் பங்கு வகிக்கிறது. சரியான தூக்கம் தவிர்க்க முடியாத காரணியாகும். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம். 

 உணவுப் பழக்கம்: 

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான் எடை குறைப்பில் பங்கு வகிக்கிறது.  சரிவிக சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஐந்து வகையான சத்துள்ள உணவுகளை அன்றாடம் உண்ண வேண்டும்.  கண்டிப்பாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும். இனிப்பு பண்டங்களை, காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சர்க்கரை இல்லாமல் டீ, காபி அருந்தலாம். அதிகமான அளவில் கொழுப்பு, உப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடாதீர்கள்.  

இதையும் படிங்க:  எடையை குறைக்கும் அற்புத மசாலா பொருள்..இதை '1' டம்ளர்ல போட்டு குடிங்க!!

35
எந்த உணவை உண்ணலாம்?

நீங்கள் கடைகளில் வாங்கும் உணவுகளின் லேபிள்களை படியுங்கள். சிவப்பு நிற குறியீடு உணவுகளை தவிர்த்து பச்சை நிற குறியீட்டைக் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுங்கள்.  

சர்க்கரை பானங்கள் வேண்டாம்!

நீங்கள் எடையை குறைக்க நினைத்தால் சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிருங்கள். வெறும் தண்ணீரில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழங்களை போட்டு குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காத ப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம். தினசரி 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். 

நொறுக்குத் தீனி: 

பொழுதுபோக்கும் நேரங்களில் கொறிக்கும் நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக எடை குறைப்பில் நல்ல விளைவுகளை தராது. அவற்றை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  இட்லி சாப்பிட்டால் எடை குறையுமா? ஆரோக்கிய நன்மைகள் என்னென?

45
உடற்செயல்பாடு:

தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சாப்பிட்டதும் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஒரு வாரத்தில் 150 நிமிடங்களாவது உடற்செயல்பாடு அவசியம். குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சியாவது மேற்கொள்ளுங்கள்.  லிப்ட் பயன்படுத்தாமல் படியேறுங்கள். 

மன அழுத்தம் தவிர்! 

மன அழுத்தம் காணப்பட்டால் எடை குறைப்பில் நல்ல பலன்கள் கிடைக்காது. உங்களுடைய மனநிலையை சீராக்கி மகிழ்வாக இருப்பது எடையை குறைக்க உதவும். மன அழுத்தம் அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரந்தால் எடை குறைப்பு தாமதமாகும். 

விளையாட பிடிக்குமா? 

நீங்கள் ஏதேனும் விளையாட்டை ரசித்து விளையாடுவீர்கள் என்றால் தினமும் அதை பின்பற்றுங்கள். பேட்மிட்டன், வாலிபால் போன்ற ஏதேனும் ஒருவிளையாட்டை நண்பர்களோடு விளையாடுங்கள். 

ஆழ்ந்த தூக்கம்

தினமும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். உங்கள் தூக்க நேரம் குறைந்தால் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சரியான தூக்கம் எடை இழப்பில் பெரிய வகையில் உதவும். நீங்கள் பகலில் உடற்பயிற்சி செய்வது இரவு தூக்கத்தை மேம்படுத்தும்.   

55
எடை இழப்புக்கு செய்ய வேண்டியவை:

1). துரித உணவுகளை தவிர்த்தல் 
2). எண்ணெய் பண்டங்களை தவிர்த்தல்
3). தினம் நடைபயிற்சி
4). வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சி
5). தண்ணீர் குடித்தல்
6). காலை உணவு உண்ணுதல்  7). வைட்டமின் 'டி' உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்
8). இனிப்பை தவிர்த்தல்
9). நல்ல தூக்கம்
10). மன அழுத்தம் இன்றி இருத்தல்.

Read more Photos on
click me!

Recommended Stories