இரவில் இந்த 3 பொருளையும் நீரில் ஊறவிட்டு, காலையில் எழுந்ததும் குடித்தால்.. உடம்பு தங்கம் மாதிரி ஜொலிக்கும்!!

First Published | Jun 21, 2023, 2:14 PM IST

இரவில் ஊறவைத்து காலையில் உலர் பழங்கள், பாதம் மற்றும் சில பயிர்வகைகளை உண்பார்கள். ஆனால் இரவில் 3 பொருள்களை ஊற வைத்து காலையில் அந்த நீரை குடிப்பதால் உடலின் நச்சுக்கள் எல்லாம் நீங்குமாம். வாங்க பார்க்கலாம். 

காலையில் காபி, டீ குடிப்பது பலருக்கும் பழக்கமாகியிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக வேறு சில பானங்களை குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? சிலர் வெந்நீரில், எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கிறார்கள். ஆனால் சில ஆய்வுகள் இதனால் பயனுள்ள மாற்றங்கள் வராது என்றே கூறுகிறது. இதை விட வெள்ளரி, புதினா இலைகள், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து குடிப்பதால் பயன்கள் நிறைய இருக்கும். 

பெரிய பாத்திரம் அல்லது கண்ணாடி ஜார் எடுத்து அதில் நீருற்றி வையுங்கள். வெள்ளரி, பாதி எலுமிச்சை, சில புதினா இலைகள் ஆகியவற்றை நறுக்கி உள்ளே போடுங்கள். இதை இரவு முழுக்க மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் குடித்தால் போதும். இதை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கு காணலாம். 

Latest Videos


நீரேற்றம்: 

உடல் எப்போதும் நீரேற்றுடன் இருக்க இந்த தண்ணீர் உதவியாக இருக்கும். காலையில் இதை குடித்தால் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து, நாள் முழுக்க உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளரியில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எலுமிச்சையில் உள்ள அமில பண்புகள் நம்முடைய செரிமானத்திற்கு உதவும். உடலையும் குளிர்ச்சியாக வைக்கும். 

எடை குறைப்பு: 

தினமும் காலையில் இந்த நீரை தயார் செய்து குடிப்பதால் உடலின் வளர்ச்சியை மாற்றம் அதிகரிக்கிறது. உடலில் காணப்படும் கெட்ட கொழுப்பு நீங்கி, விரைவில் எடை குறையும். இந்த பானத்தை காலையில் குடிப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் பசி ஏற்படாது. எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த பானத்தை அருந்தலாம். 

உடலின் நச்சுக்கள் நீங்கும்: 

நம்முடைய உடலில் காணப்படும் நச்சுக்களை வெளியேற்ற இந்த பானம் உதவியாக இருக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றினால் தான் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உணர முடியும். இந்த பானத்தை தினமும் காலையில் அருந்துவதால் உடல் நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறும். 

இதையும் படிங்க: இந்தக் கோடையில் நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அழகு மேம்படும்: 

நாம் உடலை வறண்டு போகாமல் நீரேற்றமாக வைத்திருந்தால் சருமத்தின் பொலிவு மேம்படும். தினமும் எலுமிச்சை, புதினா, வெள்ளரி ஆகியவை ஊறவைத்து தயார் செய்யும் பானத்தை குடித்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகியவை நீங்கி முகம் பொலிவு பெறும். 

நோயெதிர்ப்பு சக்தி:  

எலுமிச்சை, புதினா, வெள்ளரி ஆகியவை சேர்த்து தயார் செய்யும் இந்த பானத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மற்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதை தினமும் காலையில் குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  

இதையும் படிங்க: வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு... இந்த 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?

click me!